ARTICLE AD BOX
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நிலையில் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் டேட்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா இன்ஸ்டாகிராமில் தன் காதலனை பிரிந்து விட்டது போல் ஒரு பதிவு போட்டுள்ளார். அதாவது காதலை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எதிரில் இருப்பவர்களுக்கு ரகசிய ஆர்வத்தை காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. முதலில் உங்களை ஒருவர் அழகாக பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் சுற்றி இருப்பவர்களை அழகாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் பிரேக்கப் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு தமன்னா பதில் கூறவும் இல்லை மறுக்கவும் இல்லை. மேலும் இதன் மூலம் பிரேக்கப் உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.