Blood group ஐ விடுங்கள்! உங்கள் கை விரல் நீளத்தை வைத்தே நீங்கள் யாருனு சொல்லிடுவோமே!

2 days ago
ARTICLE AD BOX

Blood group ஐ விடுங்கள்! உங்கள் கை விரல் நீளத்தை வைத்தே நீங்கள் யாருனு சொல்லிடுவோமே!

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் கை விரல்களின் நீளம் அல்லது அதன் அமைப்பை வைத்து நிச்சயம் நீங்கள் யார் என்பதை கண்டறிந்து விடலாம். உங்களுடைய குணாதிசயங்களையும் புட்டு புட்டு வைத்துவிடலாம்.

நாம் பழகும் நபர் யார் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள சில காரணிகள் உள்ளன. இது அவரவர் நம்பிக்கையை பொருத்து அமையும். வெள்ளையா இருப்பவன் வெள்ளந்தி, கருப்பா இருப்பவன் பொய் பேச மாட்டான்... இதெல்லாம் எல்லாருக்கும் பொருந்தாது.

personality test Chennai

அது போல் ஜோதிட ரீதியில் இந்தெந்த நட்சத்திரங்கள், ராசிகளை கொண்டவர்களின் குணநலன்கள் இப்படிதான் இருக்கும் என கூறுவதையும் எல்லாரும் ஏற்க மாட்டார்கள். அது போல் மச்சங்களை வைத்தும் ஆளின் தோற்றத்தை வைத்தும் சில பல ஜோதிடங்கள் சொல்லப்பட்டு வந்தன.

அந்த வகையில் தற்போது கை விரலின் நீளம் மற்றும் அதன் அமைப்பை வைத்து ஒருவரது குணங்கள் இப்படித்தான் இருக்கும் என்பது குறித்து சொல்லப்படுகிறது. விரலின் நீளத்தை வைத்து எப்படி சொல்ல முடியும் என்பதை பார்க்கலாம்.

ஆள் காட்டி விரல், மோதிர விரலை விட நீளமாக இருந்தால்

நம் விரல்களை பார்த்திருப்போம். அதில் ஆள்காட்டி விரல் எனப்படும் கட்டை விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே இருக்கும் விரலானது மோதிர விரலை விட சற்று நீளமாக இருக்கும். அதை வைத்துக் கூட தனிப்பட்டவர்களின் குணாதிசயங்களை சொல்லலாம். உங்களுக்கு அப்படி இருந்தால் நீங்கள் பிறக்கும் போதே நம்பிக்கை, தலைமைப் பண்புகளுடனேயே பிறந்திருப்பீர்கள். உங்கள் லட்சியத்தை அடையாமல் விட மாட்டீர்கள்.

ஆள்காட்டி விரலும் மோதிர விரலும் சம அளவில் இருந்தால்

சிலருக்கு ஆள்காட்டி விரலும் மோதிர விரலும் சம அளவில் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நல்ல திறமைசாலியாக இருப்பீர்கள். இயற்கையாகவே உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் அமைதியானவராகவும் இருப்பீர்கள். தங்களை சுற்றி இருக்கும் இடத்தை அமைதிப்படுத்துவதில் நீங்கள் வல்லவர்கள். உங்களிடம் கேட்கும் திறன் இருப்பதால் மக்கள் உங்களை நம்புகிறார்கள்.

ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால்

ஒரு வேளை உங்கள் ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் நீளமாக இருந்தால், நீங்கள் வியூகங்களை வகுப்பதில் வல்லவர்கள். உணர்வுகளை விட செயல்முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் நடைபெறும் மாற்றங்களை கண்டு அஞ்ச மாட்டீர்கள். அதை எப்படி ஏற்பது என்பது உங்களுக்கு தெரியும். அது போல் எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை எப்படி எதிர்கொள்வது என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் திறமைசாலிகள்.

கட்டை விரலின் நீளம்

நம் விரல்களில் கட்டை விரல்தான் வலிமையானது. ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கட்டை விரல் இருக்கும். அதன் வடிவத்திலும் நீளத்திலும் மாறுபடும். உங்கள் விரல்களை விட கட்டை விரல் சற்று நீளமாக இருந்தால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். எந்த முடிவையும் தைரியமாக எடுப்பீர்கள். ஒரு முடிவில் உறுதியாக இருப்பீர்கள்.

இப்படிதான் விரலின் நீளம் மற்றும் அமைப்பை வைத்து ஒருவரது குணங்களை சொல்வது ஆகும். இந்த criteria-வில் நீங்கள் எந்த ரகம், உங்களுக்கு எங்கள் ஜோதிடம் பொருந்துகிறதா என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

More From
Prev
Next
English summary
Here is the personality test to know using the finger length.
Read Entire Article