ARTICLE AD BOX
Bigg Boss: விஜய் டிவிக்கு டாடா.. இனி கலர்ஸ் தமிழில் பிக் பாஸ்..குழப்பத்தில் ரசிகர்கள்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஈடுபாடு மிகப்பெரிய அளவில் இருந்தது. அதுக்கு காரணம் என்னவென்றால், ஏதோ ஒரு துறையில பிரபலமானவர்கள் 100 நாள் ஒரு வீட்டிற்குள் இருக்கும் போது, என்னென்ன செய்வாங்க, எப்படி நடந்துப்பாங்க கொள்வார்கள், பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை பார்ப்பதில் மக்களுக்கு இருந்த ஆர்வம் தான். இதனால், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெற்றது.
ஹிந்தி பிக் பாஸ் இதுவரைக்கும் 18 சீசன்கள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், தமிழ் பிக் பாஸ் எட்டாவது சீசன் கடந்த மாசம் முடிவடைந்தது. பிக் பாஸ் சீசனை 7 சீசன்களாக கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்துல விஜய் சேதுபதி, எப்படி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று ரசிகர்களுக்கு சில சஞ்சலங்கள் ஏற்பட்டாலும். முதல் பாலை சிக்சர் என்பது போல முதல் நாளே அட்டகாசமான தொகுத்து வழங்கி ஸ்கோர் செய்தார்.

கலர்ஸ் தமிழில்: பிக் பாஸ் எட்டு சீசனில் இந்த முறை பணப்பெட்டி டாஸ் நடைபெற்றது. இதிலும், முத்துக்குமரன் சிறப்பாக செயல்பட்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓடி பணப்பெட்டியை எடுத்தார். அதுமட்டுமில்லாமல், எட்டவது சீசனின் டைட்டிலை முத்து குமரன் வென்றார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யாவும், மூன்றாவது இடத்தை ரையானும் பெற்றனர். ஜாக்குலின் வெற்றி வாகை சூடுவார் என எதிர்ர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பணப்பெட்டி டாஸ்கில் குறிபிட்ட நேரத்திற்குள் வராததால், வீட்டை விட்டு வெளியேறினார்.
விஜய் டிவிக்கு டாடா: இந்நிலையில் ஜனவரி மாதம் முடிந்த பிக் பாஸ் 8 நிகழ்ச்சி, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பிப்ரவரி 23ம் தேதி இரவு 7 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம் என கலர்ஸ் தமிழ் சேனலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே பிக் பாஸ் ஷோவை விஜய் டிவியில் பார்த்து ரசித்த மக்கள் இந்த அறிவிப்பு மூலம் குழப்பம் அடைந்துள்ளனர்.மேலும், அடுத்து வர இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவியில் பார்க்க முடியாத என்றும், இனி கலர்ஸ் தமிழ் சேனலில் தான் வருமா என கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஜியோ ஹாட் ஸ்டார்: ஜியோ நிறுவனம், ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை ஒன்றிணைத்து புதிய ஸ்ட்ரீமிங் தளமாக ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு பெரிய தளங்கள் இணைந்து JioHotstarயை குறைந்த கட்டணத்தில் உருவாக்கி உள்ளனர். இந்த ஓடிடி தளத்தில் மூன்று மாதங்களுக்கு ரூ.149 என்ற கட்டணத்தையும், ஓராண்டுக்கான பிளான் வெறும் ரூ.499 உள்ளது. இதனால், இந்த ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பலரும் இணைவதற்கு வாய்ப்பு உருவாகி உள்ளது. இதனால் தான், பிக் பாஸ் ஒளிபரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது.