ARTICLE AD BOX

ரேஷன் கார்டில் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் கார்டில் எதுவும் வாங்க முடியாது. திட்டத்திலிருந்து பெயர் நீக்கம் செய்யப்படும். ரேஷன் கார்டு என்பது ஏழை எளிய மக்களுக்கு அரசின் நிதியுதவிகளை பெறுவதற்கு அரசு வழங்கும் ஒரு அட்டை. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவிகள் கிடைக்கிறது. இதன் மூலமாக நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தான் ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கி உள்ளது. அரசு தரப்பில் வழங்கப்படும் மானியம் உண்மையான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீப காலமாக போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருப்பது அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டு இணைப்பதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி உங்களுடைய ரேஷன் கார்டுடன் இன்னும் ஆதார் கார்டு இணைக்காவிட்டால் விரைவில் அதை செய்ய வேண்டும். இது மிகவும் எளிமையானது. வீட்டில் இருந்தபடியே இணைத்துக் கொள்ளலாம்.
அதாவது முதலில் உங்களுடைய மாநிலத்தின் பொது விநியோக அமைப்பு இணையதளத்தில் உள் நுழைய வேண்டும். ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். ஆதார் மற்றும் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதற்கான விருப்பம் கிடைக்கும். தேவையான தகவல்களை பூர்த்தி செய்த பின் பதிவு செய்யப்பட்ட செல்போனிற்கு ஓடிபி வரும். ஓடிபி நம்பரை உள்ளிட்டவுடன் இணைப்பு செயல்முறை முடிவடையும். இது தொடர்பான உறுதிப்படுத்தல் செய்தியும் அனுப்பப்படும்.