ARTICLE AD BOX

பொதுவாகவே வங்கி கணக்கு திறப்பதற்கு எந்த ஒரு வரம்பும் கிடையாது. வங்கி கணக்குகளின் எண்ணிக்கையில் ரிசர்வ் வங்கி எந்த வரம்பையும் நிர்ணயிக்கவில்லை. எனவே பெரும்பாலானவர்கள் மூன்று முதல் நான்கு வங்கி கணக்குகளை வைத்துள்ளார்கள் . சிலர் அதைவிட அதிகமாக வைத்திருக்கிறார்கள். அனைத்து கணக்குகளையும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. அதேநேரம் அனைத்து வங்கிகளும் சம்பள கணக்கை தவிர சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பதை கட்டாயமாக வைத்துள்ளது.
இதை செய்யாவிட்டால் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட தொகை எடுக்கப்படும். குறைந்தபட்ச பணம், வங்கியில் இருந்து பெறும் மெசேஜ் சேவைக்கான கட்டணம், டெபிட் கார்டு கட்டணம் போன்றவற்றை பார்த்துக்கொள்வது அவசியம். இதனால் தேவையான கணக்குகளை மட்டும் வைத்துக் கொள்வதே சிறந்தது ஆகும்.