ARTICLE AD BOX
Baakiyalakshmi serial: ராதிகா உன் வாழ்க்கையில் வந்ததையே மறந்துடு.. கோபியின் மனதை மாற்றும் ஈஸ்ரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக மாஸ் காட்டி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து முன்னணி சீரியலாகவே இருந்து வருகிறது. இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாக அடுத்தடுத்து கூறப்பட்டாலும் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் அதிகமாக கிடைத்து வரும் நிலையில் சீரியலுக்கு எண்ட் கார்டு போட சேனல் தயாராக இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து 1300 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார பிரமோ தற்போது வெளியாகி உள்ளது. ராதிகா தன்னை விட்டு நிரந்தரமாக பிரிந்ததை நினைத்து அதிர்ச்சி அடையும் கோபி மீண்டும் குடிக்க சென்ற நிலையில், இடையில் வந்த ராதிகாவை மறந்து விடுமாறு ஈஸ்வரி கூறுவதாக இந்த பிரமோவில் காணப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்தடுத்த எபிசோட்கள் சிறப்பாக அமைந்து வந்தாலும் சில விமர்சனங்களையும் இந்த சீரியல் தொடர்ந்து பெற்று வருகிறது. 1300 எபிசோடுகளுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பான நிலையில் தொடர்ந்து முன்னணி சீரியலாக டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது. சில மாதங்கள் டிஆர்பியில் குறைந்து மூன்றாவது இடத்தை பிடித்து வந்த பாக்கியலட்சுமி தொடர், தற்போது முன்னேறி இரண்டாவது இடத்திற்கு தாவியுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி: உடல் நிலை பாதிப்பு காரணமாக ஈஸ்வரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாக்கியா வீட்டிற்குள் வருகிறார் கோபி. பாக்கியாவிற்கு இதில் விருப்பமில்லாத நிலையிலும் தன்னுடைய மாமியார் மற்றும் மகன், மகளின் விருப்பத்திற்காக அவர் ஒப்புக்கொள்கிறார். பாக்கியா வீட்டிற்குள் ராதிகாவை ஈஸ்வரி அனுமதிக்காத நிலையில் ராதிகாவை கோபி பிரியக்கூடாது என்பதை அவருக்கு புரிய வைத்து இருவரையும் தன்னுடைய வீட்டிலேயே வசிக்க இடம் கொடுக்கிறார் பாக்கியா. ஆனால் கோபிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை புலப்படுத்தும் வகையில் அவரிடம் வாடகை வாங்கிக் கொள்கிறார்.
கோபியை பிரிந்த ராதிகா: தொடர்ந்து சில தினங்கள் அவர்கள் அங்கு இருந்த நிலையில் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று ராதிகா கூறுகிறார். ஆனால் தன்னுடைய அம்மா மற்றும் குழந்தைகளை பிரிய மனமில்லாமல் கோபி எதிர்த்து பேசுகிறார். இந்நிலையில் கோபியை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு ராதிகா தன்னுடைய மகள் மயூவை கூட்டிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்புகிறார். அவருடைய இந்த செயல் கோபிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராதிகாவை சந்தித்து இது குறித்து கேட்கிறார். இந்த பிரிவு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று கோபி கேட்கும் நிலையில் நிரந்தரமானது என்றும் அங்கிருந்து கிளம்புமாறும் ராதிகா கூறுகிறார்.
பாக்கியலட்சுமி இந்த வார பிரமோ: இதனால் அதிர்ச்சி அடையும் கோபி மறுபடியும் குடிக்க செல்கிறார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கோபியை சமாதானப்படுத்துகிறார் ஈஸ்வரி. இடையில் வந்த ராதிகாவிற்காக தங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறுகிறார். ராதிகா, மயூ இல்லாத வாழ்க்கையை யோசிக்க முடியவில்லை என்று கோபி கூற, கோபியை தூக்கி எறிந்துவிட்டு போன ராதிகா வேண்டாம் என்றும் அவருக்கு தாங்கள் இருப்பதாகவும் ஈஸ்வரி கூறுகிறார். தொடர்ந்து ராதிகா என்ற ஒருவர் கோபி வாழ்க்கையில் வந்ததை மறந்துவிடுமாறும் ஈஸ்வரி கூறுவதாக இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.