ARTICLE AD BOX
விடிந்தால் நிச்சதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்தை வெறுக்கும், குறிப்பாக மாப்பிள்ளையை வெறுக்கும் நிலாவை, இரவோடு இரவாக தூக்கிய சோழன், சாலை மார்க்கமாக அவளை சென்னைக்கு அழைத்துச் செல்கிறான். திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் அவர்களின் பயணத்தை, முறியடித்து, அவளை மீட்க, நிலாவின் அப்பா, அண்ணன் மற்றும் வருங்கால கணவன் ஆகியோர் காரில் புறப்படுகின்றனர்.
காரில் செல்லும் போது, வழக்கமான தன்னுடைய திமிர் பேச்சால், மாமனார் மற்றும் மைத்துனரை கேவலமாக பேசுகிறான் மாப்பிள்ளை. குறிப்பாக நிலாவின் கேரக்டரைப் பற்றி, கேவலமாக சித்தரித்து மாப்பிள்ளை பேசுகிறார். அதைக் கேட்கும் நிலாவின் அப்பாவுக்கு, பயங்கர கோபமும், ஆத்திரமும் வருகிறது. அந்த பேச்சை நிறுத்துமாறு அவர் கேட்கிறார். ஆனால், மாப்பிள்ளையோ மாறாக, நிலாவோடு சேர்த்து, நிலாவின் அப்பாவையும் சாடுகிறான்.
கடுப்பான நிலாவின் அப்பா, ‘அந்த பேச்சை நிறுத்துமாறு’ கூறுகிறார். ஆனால், மாப்பிள்ளை தன்னுடைய பாணியில், நிலாவையும், நிலாவின் குடும்பத்தையும் திட்டுகிறான். ஒருகட்டத்தில் அவன் பேச்சு உச்சம் போக, மாமனாரையும் மதிக்காமல் பேச, கடுப்பான நிலாவின் அண்ணன், மாப்பிள்ளையை எச்சரிக்கிறான். இப்படி, அவர்களுக்குள், வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வாக்குவாதத்தால் ஆத்திரம் அடைந்த நிலாவின் அப்பா, தன் ஆட்களுக்குப் போன் செய்து, ‘சோழனை முடித்து விட்டு, தன் பெண்ணை மீட்குமாறு’ கட்டளையிடுகிறான். மேலும், தன் வீட்டு சிசிடிவி காட்சிகளை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்க்கிறார்கள். அப்போது, ஓடிப் போகும் முன்பு, நிலாவும்-சோழனும் வீட்டு வளாகத்தில் நின்று ப்ளான் போடும் வீடியோ இருப்பது தெரிகிறது.
அதை வைத்து, சோழனுடன் தான் நிலா சென்றிருக்கிறாள் என்று முடிவு செய்கிறார் நிலாவின் அப்பா. மேலும், அருகில் உள்ள சித்தப்பா வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் சோதனையிட்டு, சோழன் காரில் தான், நிலா தப்பிச் செல்கிறாள் என்பதை உறுதி செய்கிறார். இந்த நிலையில், காரில் தன்னுடன் வரும் நிலாவை, சோழன் வம்பிழுத்தபடி கார் ஓட்டி வருகிறான். ஒரு கட்டத்தில், ‘ஒரு சைக்கோவிடம் தப்பித்து, இன்னொரு சைக்கோவிடம் மாட்டிட்டேன்’ என்று சொல்ல வைத்துவிடாதீர்கள் என்று நிலா கூறும் அளவிற்கு, அவர்களின் உரையாடலம் போகிறது.
இறுதியில், நிலாவின் அப்பா கட்டளையிட்டபடி, சோழன், நிலா சென்ற காரை வழிமறிக்கிறது ஒரு கும்பம். பயங்கர ஆயுதங்களுடன் உள்ளிருந்து ஓடி வரும் ரவுடிகளைப் பார்த்து, நிலாவும், சோழனும் அதிர்ந்து பார்க்கிறார்கள். அப்படியே முடிவுகிறது, இன்றைய எபிசோடு. நிலாவுக்கும், சோழனுக்கும் என்ன ஆனது? நிலாவின் அப்பா, அடுத்து எடுக்கப் போகும் முடிவு என்ன? ரவுகளை சமாளிப்பார்களா சோழனும் நிலாவும்? என்று பல்வேறு எதிர்பார்ப்புடன் நிறைவு பெறுகிறது பிப்ரவரி 20 ம் தேதி எபிசோடு.

டாபிக்ஸ்