ARTICLE AD BOX
`ஞாபகம் வருதே' என நினைவுகளைத் தூண்டும் பாடல், மலையாளப் பெண்ணாக வரும் கோபிகாவுடனான சேரனின் காதல் முறிவு, இந்த சமூகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்று திரும்பிப் பார்க்க வைத்த சினேகா - சேரன் நட்பு என இந்தப் படம், அந்த சமயத்தில் அனைவரையும் ரசிக்க வைத்தது.

3 தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை ஆட்டோகிராப் வாரிக் குவித்தது. இவ்வாறிருக்க, ரீ ரிலீஸ் கலாசாரம் பிரபலமாகி வரும் இக்கால சூழலில், ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.
Very happy to unveil the Trailer of @CheranDirector's #Autograph ❤️❤️
My lovely wishes to you sir and the entire team for the Re-release @actress_Sneha #Gobika #Mallika #Kaniga #Rajesh @dop_ravivarman @vijaymilton #DwaRaghanath #SangiMahendra #Bharadhwaj #SabeshMurali… pic.twitter.com/ccHoW1Bhsc
இந்த நிலையில், AI தொழில்நுட்பத்தால் ஜெனரேட் செய்யப்பட்ட `ஆட்டோகிராப்' திரைப்படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
"நினைக்க மறந்ததாலும், மறக்க முடியாத பசுமை நினைவுகளின் காட்சிப்பேழை, 'ஆட்டோகிராஃப்'!" - #15YearsOfAutograph