AUS vs SA 2025: தொடரும் கனமழை.. டாஸ் கூட போடவில்லை.. ரத்தான ஆட்டம்..

1 day ago
ARTICLE AD BOX

AUS vs SA 2025: தொடரும் கனமழை.. டாஸ் கூட போடவில்லை.. ரத்தான ஆட்டம்..

 

9 வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரோலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, , ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 அணிகள் விளையாடுகின்றன. இன்று ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கும்பமேளாவில் போனை தண்ணீரில் முக்கி எடுத்த வடக்கு பெண்.. ஏன் தெரியுமா..? அதிர்ச்சியடைய வைக்கும் உண்மை!!

இந்நிலையில் இப்போட்டிக்கு டாஸ் போடுவதற்கு முன் சில மணி நேரம் மழை பெய்யாமல் இருந்ததால், ஆட்டம் தொடங்குவதில் எந்த தாமதமும் இருக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் டாஸ் போடும் சமயத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ராவல்பிண்டி மைதான ஊழியர்கள் உடனடியாக தார்பாய் கொண்டு மைதானத்தில் பல்வேறு பகுதிகளையும் மூடினர். இதனைத் தொடர்ந்து மழை கொஞ்சம் கூட குறையாததால், டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு அணிக்கும் தலா 1 பாய்ண்ட் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

follow our Instagram for the latest updates

The post AUS vs SA 2025: தொடரும் கனமழை.. டாஸ் கூட போடவில்லை.. ரத்தான ஆட்டம்.. appeared first on EnewZ - Tamil.

Read Entire Article