
பிப்ரவரி 27, லாகூர் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடர், பாகிஸ்தானில் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் போட்டியில், வெற்றிவாகை சூட ஒவ்வொரு கிரிக்கெட் அணிகளும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகள் அரையிறுதி தேர்வுக்கான தகுதியை இழந்துவிட்டன. இதனிடையே, போட்டியின் 10 வது ஆட்டம் ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி - ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (Australia National Cricket Team Vs Afghanistan National Cricket Team Timeline) இடையே நடைபெறுகிறது. PAK Vs BAN: பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்.. மழையால் தள்ளிப்போகும் ஆட்டம்.. ரசிகர்கள் வருத்தம்.!
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல் (Australia Vs Afghanistan Cricket):
பிப்ரவரி 28, 2025 (நாளை) பிற்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் (AUS Vs AFG Cricket) அணிகள் நேரடியாக களம்காண்கின்றன. இந்த ஆட்டம் லாகூரில் உள்ள காதபி (Gaddafi Stadium Lahore) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. அன்றைய நாளில் பகல் நேர வெப்பநிலை 19 டிகிரி செல்ஸியஸ், இரவு நேர வெப்பநிலை 14 டிகிரி செல்ஸியஸ் என்ற அளவில் இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 9 கிமீ வரையில் இருக்கலாம். மழைக்கான வாய்ப்புகள் என்பது அன்றைய நாளில் இருக்கின்றன. இதனால் ஆட்டம் சிறிது தாமதம் ஆகலாம் என்பது வானிலை கணிப்பு.
வீரர்கள் விபரம்:
ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் (Afghanistan Squad for Champions Trophy 2025 AUS Vs AFG Match) ஹஷ்மதுல்லா ஷஹிதி (Hashmatullah Shahidi), இப்ராஹிம் சர்டன், ரஹ்மத் ஷா, செதிகுல்லா அடல், அசமுத்துல்லாஹ் ஓமர்சாய் (Azmatullah Omarzai), குல்படின் நயீப், முகம்மது நபி (Mohammad Nabi), விக்ரம் அலிகில், ரஹ்மானுலா குர்பாஸ், பரீத் அஹ்மத், பசல் பரூகி, நன்கேயளியா ஹரோடி, நவீத் ஜர்டன், நூர் அஹ்மத், ரஷீத் கான் (Rashid Khan) ஆகியோர் விளையாடவுள்ளனர். அணியை ஹஷ்மதுல்லா ஷஹிதி (Hashmatullah Shahidi) வழிநடத்துகிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சார்பில் (Team Australia Squad for ICC Champions Trophy 2025) ஜேக் பிரஸர் மெக்குர்க் (Jake Fraser-McGurk), ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith), டார்விஸ் ஹெட் (Tarvis Head), மார்ன்ஸ் லபுஷக்னே (Marnus Labuschagne), ஆரோன் ஹார்டி (Aaron Hardie), கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell), மேத்திவ் ஷார்ட் (Matthew Short), அலெக்ஸ் காரே (Alex Carey), ஜோஷ் இங்கிலீஸ் (Jos Inglis), ஆடம் ஜாம்பா (Adam Zampa), பென் டவர்ஷுய்ஸ் (Ben Dawarshuis), நாதன் எல்லிஸ் (Nathan Ellis), சியான் அப்போட் (Sean Abbott), ஸ்பென்ஸர் ஜான்சன் (Spencer Johnson), தன்வீர் சங்கா (Tanveer Sangha) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.