Auroville : ஆரோவில்லில் திடுக்கிடும் சம்பவம் ; அதிரடியில் இறங்கிய போலீஸ்...!

18 hours ago
ARTICLE AD BOX

விழுப்புரம் : சர்வதேச நகரமான ஆரோவில்லில் உரிய அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரோவில்லில் உரிய அனுமதியின்றி செம்மண் கொள்ளை

புதுச்சேரி மாநிலம் அருகே விழுப்புரம் மாவட்ட எல்லையில் அடுத்து சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது. சுமார் 3500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆரோவிலில் பெரும்பாலும் செம்மண் காடுகள் நிறைந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டதில் சர்வதேச நகரமாக ஆரோவில் அமைந்துள்ளது. இப்பகுதி முழுதும் பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரி பயிராக முந்திரி அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் கூழாங்கற்கள் அதிகளவில் புதைந்துள்ளன. இதனால் விவசாயம் செய்யமுடியாது என நினைத்த விவசாயிகள், நிலங்களை குத்தகை மற்றும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். நிலத்தை வாங்கியவர்கள் மண்ணில் கூழாங்கற்கள் வளம் உள்ளதை கண்டுபிடித்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அனுமதியின்றி கூழாங்கற்களை, தோண்டி எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக வானுார் அடுத்த ராயபுதுப்பாக்கம் பனைமரத்தோப்பில் இருந்து மாத்துாருக்குகுறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் மூலம் பல இடங்களில் 25 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி எடுக்கின்றனர்.

மாத்திர் மந்திர் அருகே செம்மண் கொள்ளை

இந்த நிலையில், ஆரோவில்லில் உள்ள மாத்திர் மந்திர் அருகே உரிய அனுமதியின்றி ஆரோவில் நிர்வாகம் செம்மண் எடுப்பதாக வருவாய் துறை மற்றும் ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.  இதனையடுத்து, வருவாய்த் துறையினர் மற்றும் ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் அவர்கள் உரிய ஆவணமின்றி செம்மண் எடுத்தது தெரியவந்தது.

டிராக்டர் மற்றும் ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல்

இதனை தொடர்ந்து மண் அள்ள பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆரோவில்லில் சாலை அமைக்க மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் பூதாகரமான நிலையில், தற்போது ஆரோவில் நிர்வாகத்தினர் செம்மண் எடுத்த சம்பவம் ஆரோவில்வாசிகள் மற்றும் உள்ளூர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article