Atlee Watch : அட்லீயின் ரோலக்ஸ் வாட்ச் விலை எத்தனை கோடி தெரியுமா...மனுஷன் வாழுறான்

4 hours ago
ARTICLE AD BOX

இந்திய திரைத்துறையில் முன்னணி கமர்சியல் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அட்லீ. தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் விஜயை வைத்து அடுத்தடுத்து மூன்று ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். பின் இந்தியில் ஷாருக் கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தார்.  தான் இயக்கிய தெறி படத்தின் இந்தி ரிமேக்கை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பாக தயாரித்தார். தற்போது பிக்கல் பால் விளையாட்டில் தந்து சொந்த அணி வைத்துள்ளார்.

அட்லீயின் ரோலக்ஸ் வாட்ச்

ஜவான் பட வெற்றிக்குப் பின் அட்லீ பாலிவுட்டின் முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராக கலந்துகொள்கிறார். ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் அட்லீ கலந்துகொண்டார். கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநராக மட்டுமில்லாமல் ஃபேஷன் ஐகானாகவும் அட்லீ இருந்து வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அட்லி அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சின் விலை சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது

நிகழ்ச்சி ஒன்றில் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர்  Rolex Day Date 40 oyster கைகடிகாரம் அணிந்திருந்தார். இந்த கடிகாரத்தின் விலை பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த கடிகாரத்தின் விலை 1.7 கோடி .

அட்லீயின் அடுத்த படம்

அட்லீ அடுத்தபடியாக சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்கபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் தெலுங்கில் அல்லு அர்ஜூன் படத்தை இயக்க அட்லீ பல கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்

Read Entire Article