ARTICLE AD BOX
2025-ம் ஆண்டுக்கான ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் டி20 வடிவில் போட்டிகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்துக்குள் உள்ள நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த தொடர் 17-வது முறையாக நடைபெற உள்ளது. இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என இந்தியா டுடே வலைத்தளம் கூறுகிறது.
முன்னணி ஆசிய நாடுகள் வரவிருக்கும் டி-20 உலகக் கோப்பைக்கு தங்கள் அணியைத் தயார்படுத்த இந்த தொடர் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்தியாதான் Asia Cup 2025 தொடரை நடத்துவதாக இருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் இடையே, ஒரு நாடு மற்றொரு நாட்டில் விளையாடுவதில் சச்சரவு ஏற்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டிகள் பொதுவான தளத்தில் நடைபெறும் என ஐசிசி முடிவு செய்ததையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
"அவர் சொல்லவில்லை என்றால் 10,000 ரன்கள் அடித்திருக்க மாட்டேன்" - சுவாரசியம் பகிரும் கவாஸ்கர்ஐசிசி-யின் முடிவையொட்டி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும் இந்த தொடரை நடுநிலைமையான நாட்டில் நடத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கடைசி நேர சச்சரவுகளையும் அசௌகரியங்களையும் தடுக்கலாம் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர் எனக் கூறுப்படுகிறது.
ஆசியா கோப்பை 2023-ன் போது இந்தியா பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள மறுத்தது. அந்த தொடர் ஒருநாள் சர்வதேச போட்டியாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முடிவால் பாகிஸ்தான் ஹைபிரீட் மாடலில் போட்டியை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் இலங்கையில் நடைபெற்றது.
.jpg)
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ICC - BCCI - PCB இடையே மிக நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகே பாகிஸ்தான் இந்தியாவுக்கான போட்டிகளை துபாயில் நடத்த ஒப்புக்கொண்டது.
2028 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த முக்கிய தொடர்களுக்காகவும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பயணம் செய்யாது என்றும் ஐசிசி கூறியுள்ளது. இதனால் 2025 பெண்கள் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரிலும் 2026 டி20 உலகக் கோப்பை போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு பயணம் செய்யாது.
Champions Trophy 2025: பாகிஸ்தான் நிபந்தனையை ஏற்க மறுக்கும் BCCI - இணக்கமான முடிவு எட்டப்படுமா?