ARTICLE AD BOX
ஆஸ்காரில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட 'அனோரா' படத்தை இனி ரசிகர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம். இதுகுறித்த முழு விவரம் இதோ:

‘அனோரா’ (Anora).. இந்த ஆண்டு ஆஸ்கார் மேடையில் 5 பிரிவுகளின் கீழ் விருதுகளை வாங்கி குவித்த சிறந்த படமாக பார்க்கப்பட்டது. பிரமாண்ட பட்ஜெட் எதுவும் இல்லாமல், மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது.
ஆஸ்கார் மேடையில் ஒரே படத்திற்காக இயக்குனர் சீன் பேக்கர் (Sean Baker) மொத்தம் நான்கு விருதுகளை வென்றார். அதன்படி (சிறந்த படம், எடிட்டிங், திரைக்கதை, இயக்குனர்) உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆஸ்கரில், ஒரே நேரத்தில் 4 விருதுகளை பெற்ற இயக்குனர் என்கிற சாதனையை படைத்தார்.

அதே போல், ‘தி ப்ரூடலிஸ்ட்’, ‘தி சப் ஸ்டான்ஸ்’, ‘டியூன் பார்ட் 2’, ‘எமிலியா பெரெஸ்’ போன்ற படங்களை பின்னுக்குத் தள்ளி சிறந்த படமாக ‘அனோரா’ தேர்ந்தெடுக்கப்பட்டதால், இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
‘அனோரா’ திரைப்படம் ஏற்கனவே ஓடிடியில் பணம் செலுத்தி பார்த்து கொள்ளும் முறையில் உள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் திங்கள்கிழமை முதல் பிரபலமான ஓடிடி ஜியோஹாட்ஸ்டாரில் ஆங்கிலம், இந்தி மொழிகளில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது.
Anora Review : 5 ஆஸ்கார் விருதுகளை அள்ளிய ‘அனோரா’ படத்தின் முழு விமர்சனம்

விலைமாதுகளின் வாழ்க்கையையும், மன போராட்டத்தையும் திரையில் காட்டி ஆஸ்காரில் ஆதிக்கம் செலுத்திய இந்த விலைமாது கதை தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அப்போது தமிழிலும் வரும் அதுவரை இந்தி, ஆங்கில பதிப்புகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்.

இப்படத்தின் கதை:
சீன் பேக்கர் இயக்கத்தில் வெளியான ‘அனோரா’, படத்தில் மைக்கி மேடிசன், மார்க் எடில்ஜியன், யூரா போரிசாவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி டிராமா பின்னணியில் இதை உருவாக்கியுள்ளனர். ‘அனி’ என்ற 23 வயது விலைமாதுவைச் சுற்றி கதை நகர்கிறது.
புரூக்லினில் வசிக்கும் அனி.. தொழிலின் ஒரு பகுதியாக ஒருமுறை ரஷ்யாவைச் சேர்ந்த பணக்காரரின் மகன் வன்யாவை சந்திக்கிறாள். அனியின் மீது காதல் கொண்ட அவன்.. ரகசியமாக அவளை திருமணம் செய்து கொள்கிறான். பணக்கார வீட்டு பையன் விலைமாதுவை திருமணம் செய்து கொண்டதால் எங்கும் பேச்சுக்கு இடமளிக்கிறது. இறுதியில் ரஷ்யாவில் வசிக்கும் வன்யாவின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. தங்கள் மகன் அப்பாவி என்றும்.. பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டாய் என்றும் அவர்கள் அவளை திட்டுகிறார்கள்.
தங்கள் மகனை விட்டுவிட்டால் 10 ஆயிரம் டாலர்கள் தருவதாக ஆசை காட்டுகிறார்கள். அப்படியானால், அனி அவர்கள் கொடுத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டாளா? வன்யாவை விட்டுவிட்டாளா? இறுதியில் அவள் வாழ்க்கை எப்படிப்பட்ட திருப்பங்களை சந்தித்தது? என்ற கதையுடன் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இது பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது.
சுமார் 6 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.52 கோடி) செலவில் தயாரிக்கப்பட்ட இது.. 41 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.358 கோடி) வசூலித்து வசூலில் சாதனை படைத்தது. சீன் பேக்கரின் வாழ்க்கையில் அதிக வசூல் (கிராஸ்) செய்த படமாக இது அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.