Anna Serial: சௌந்தர பாண்டி திட்டத்தை உடைத்த ஷண்முகம் - ஷாக் கொடுத்த பரணி? அண்ணா சீரியல் அப்டேட்!

4 days ago
ARTICLE AD BOX

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குடும்பங்கள் கொண்டாட கூடிய தொடராக இருக்கும், அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
 

Anna Serial Today Update

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும்  திங்கள் முதல் சனி கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் பரணியிடம் மனதில் உள்ள ஆசையை ஷண்முகம் வெளிப்படுத்த காத்திருக்கும் நிலையில், இன்று என்ன நடக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

Sisters Questioning Shamugam

சண்முகம், பரணியை அழைக்க கிளினிக் போன நிலையில், அவள் வீட்டுக்கு போன விஷயம் தெரியவருகிறது. எனவே வீட்டுக்கு வரும் வழியில் பரணிக்கு பூவும், அனைவருக்கும் பிரியாணியும் வாங்கி வருகிறான் ஷண்முகம் . வீட்டுக்கு வந்ததும், அவனின் தங்கைகள் அனைவரும்... பரணிய எதுக்கு இப்போ அமெரிக்காவுக்கு அனுப்ப மாட்டுற என கேள்விகளால் துளைக்கிறார்கள். சண்முகம் வேறு வழி இல்லாமல், சௌந்தரபாண்டி இந்த குடும்பத்தை பிரிக்க தான் பரணிய அமெரிக்க அனுப்ப நினைக்கிறான் என சதி திட்டம் பற்றி சொல்கிறான். 

Anna Serial: பரணியின் பிடிவாதத்தால் வரப்போகும் பிரச்சனை; சண்முகம் செய்யப்போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

இதைக் கேட்ட பரணி, ஆமாம் அவர் இந்த குடும்பத்தைப் பிரிக்க இணைக்கு நேத்தியா திட்டம் போடுறாரு,  ஆரம்பத்திலிருந்து அதை தானே பண்ணிக்கிட்டு இருக்காரு என்று அலுத்துக்கொண்டு சொல்கிறாள். 

சண்முகம், பரணி ரூமுக்கு வந்து பிறகு, பிரியாணியும் மல்லிகை பூவும் வாங்கிட்டு வந்தேனே எப்படி இருந்துச்சு என கேட்க, பிரியாணியை மல்லிய பூவில் யாராவது வைப்பாங்களா? என்று கேட்டு பிரியாணி மல்லிகை பூ மாதிரியும், மல்லிகை பூ பிரியாணி மாதிரி இருந்தது என திட்டுகிறாள். 
 

Vaikundam Emotional Speech

பின்னர் சண்முகம் பரணியிடம் கொஞ்சம் குரலை ஒசத்தி பேச, வைகுண்டம் சண்டை என நினைத்து... ஓடி வந்து என் மருமகள் கிட்டயா சண்டை போடுற என சண்முகத்தை அடிக்க வர, சண்முகம் அப்பா நான் ஒன்னு சண்ட போடல என்று விருக்கென வெளியே செல்கிறான். 

அதன் பிறகு வைகுண்டம் பரணியிடம், பேசும் போது...  நீ வெளிநாட்டுக்கு போய் படிச்சு பெரிய ஆளா வர்றதுல எனக்கு சந்தோஷம் தான் மா.. ஆனா நீ இந்த குடும்பத்தை விட்டுட்டு வெளிநாடு போறது நினைக்கும் போது தான் கஷ்டமா இருக்கு. சூடாமணிக்கு பிறகு, நீ தான் இந்த குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்குற என எமோஷ்னலாக பேசுகிறார்.\

Anna Serial: முத்துபாண்டியை ஏற்றி விட்ட சௌந்தரபாண்டி; எச்சரிக்கும் ஆன்மா? அண்ணா சீரியல் அப்டேட்!

Baakiyam Adviced Bharani

பின்னர் வீட்டுக்கு வரும், பரணியின் அம்மா பாக்கியம் நீ ஒன்னும் அமெரிக்காவுக்கு எல்லாம் போய் படிக்க வேண்டாம். உன்னை மெட்ராசுக்கு அனுப்பி படிக்க வச்ச நாளே இப்போ சொல்றேன், ஒழுங்க உன் புருஷன் ஷண்முகதுகூட குடும்பம் நடத்தி ஒரு வாரிசை பெத்து கொடு என சொல்ல, பரணி யார் என்ன சொன்னாலும் அமெரிக்கா போவதில் உறுதியாக இருப்பதாக கூறி ஷாக் கொடுக்கிறாள்.

Rathna go to Shanmugam

அடுத்த நாள் காலையில் ரத்னா அவசரமாக ஸ்கூலுக்கு போகணும் என்னை டிராப் பண்ணிடு என்று சொல்ல, சண்முகம் முத்துப்பாண்டியுடன் போக . ரத்னா நீங்க பரணியை கூட்டிட்டு போங்க.செல்கிறார்  நான் அண்ணனோட போறேன் என சண்முகத்துடன் கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில், பரணி ஷண்முகம் மனதை புரிந்து கொள்வாளா? அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ள அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

Read Entire Article