Amaran 100 : `` `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" - கமல்ஹாசன்

2 days ago
ARTICLE AD BOX
கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருந்தது.

சமீபத்தில் இப்படத்தின் 100-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் படக்குழுவினருடன் நடந்தது.

அதில் பேசிய கமல்ஹாசன், " `நீங்கள் எப்படி இந்தப் படத்தை ஒத்துக்கிட்டீங்கனு கேட்டால் பேசன் (PASSION) தான் காரணம். ஒரு சினிமா ரசிகனின் உண்மையான அடையாளம் ஒரு கதையைப் பார்க்கும்போது 'இது சினிமாவாக வந்தா எப்படி இருக்கும்'னு தோணும். அப்படி வந்த சினிமா ரசிகன்தான் நான். சாய் பல்லவி கேட்டாங்க 'எப்படி சார் நீங்க உங்கள புதுப்பிச்சுக்குறீங்க'னு.... நான் பாலச்சந்தர் அவர்களோட 36 படம் பண்ணவன். அது போதுமான விளக்கம்னு நினைக்கிறேன். மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா, மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ், மகள் அஸ்ரேயா இவங்களால இன்னைக்கு இங்கே வர முடியல. அவங்களோட மறத்துப்போன கவலையை மீண்டும் நினைவுறுத்துவது இல்லை எங்கள் வேலை. முகுந்த் அவர்களால் எங்களுக்கு ஏற்படும் பெருமையை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறோம். 'நான் காந்திக் கிட்டயே கையெழுத்து வாங்கிருக்கேன்'னு எங்கப்பா சொல்லுவார்.

Kamal Hassan Speech - Amaran 100

அந்த மாதிரி இந்தக் குடும்பத்துக்கிட்டயே ராஜ் கமல் பட்டயம் வாங்கியிருக்கு என்பது எனது பெருமை. 'ராஜ்குமார் பெரியசாமியை எப்படி சார் தேர்ந்தெடுத்தீங்க டக்குன்னு?'னு கேட்டாங்க. டக்குன்னு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. பிக்பாஸ்ல 5 வருஷம் வேலை பாத்தோம், தேர்தல் களத்துல என்கூட அமைதியா வேலை பார்த்ததை நான் பார்த்தேன்.

பிக்பாஸ் சமயம் நான் சொல்ற விஷயங்களை அவர் புரிந்துக்கொள்வதை நான் புரிந்துக்கொண்டேன். அதற்காக கிடைத்த வாய்ப்புதான் இது. அவர் படத்தை சரியா பண்ணலைனா தான் ஆச்சர்யம், சரியா பண்ணதுல எந்த ஆச்சர்யமும் இல்லை. அவருடைய சாய்ஸ்தான் சிவகார்த்திகேயன். 'அந்த ரோல் அந்த கேரக்டருக்கு இதெல்லாம் பண்ணீங்கனா கண்டிப்பா ஒரு வெகுமதி ரசிகர்கள் கொடுப்பார்கள்'னு சிவகார்த்திேயன்கிட்ட சொன்னேன். சொல்றது சொல்லிடுவோம். மத்தது அவங்க இஷ்டம்னு மனசுல நினைச்சேன். நிஜமாவே போயி என்னென்ன செய்யணுமோ அதை எல்லாம் செஞ்சார்.

Kamal Hassan Speech - Amaran 100

முக்கியமா தன்னைத் தானே செதுக்கி கொண்டார். 'அந்த ஊதாக் கலர் ரிப்பனா இப்படி டெல்டாய்ஸ்ஸா ஷோல்டர தூக்கிட்டு இருக்கு'னு நானே பாத்து ஆச்சர்யப்படுற அளவுக்கு இருந்தார். நான் பாத்து அட்வான்ஸ் குடுத்த சிவகார்த்திகேயன் வேற, பிரேம்ல பாத்த சிவகார்த்திகேயன் வேற. அதுக்கு அவர் உழைப்பு தான் காரணம். டைரக்டரின் மற்றொரு தேர்வு சாய்பல்லவி அவர்கள். 'என்னைய வெறும் ரௌடி பேபியாவே நினைச்சிட்டு இருக்காங்களேனு கவலையா இருந்துச்சு, நீங்க அத மாத்திட்டீங்க' அப்படின்னு சொன்னாங்க. எனக்கு தெரியும்

நீங்க ரௌடி பேபி மட்டும் இல்லைன்னு. சின்ன படங்கள், படம் பெருசா பேசப்படலைன்னாலும் நீங்க அதில் பேசப்பட்டீங்க. அது திறமைக்கான பெரிய உதாரணம். சிவகார்த்திகேயன் பத்தி இன்னும் ஒரு வார்த்தை நான் சொல்லணும் , அது படம் பண்ணும்போது எனக்குத் தெரியல. என்னைக்கு தன் முதலீட்டை வீடு கட்டியது போக சினிமாவில் போட்டாரோ 'நம்ம அலைவரிசைப்பா இவரு'னு தோணுச்சு. நான் எம்.ஜி.ஆர் அவர்களோட ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன். `நல்லாப் போய்ட்டிருக்கா ?' என்று கேட்டார். `நல்லாப்போகுதுண்ணே. பாலச்சந்தர் சார் நல்லாப் பாத்துக்குறாருண்ணே. நான் நல்லப் படம் பண்ணும்போது சொல்றேன் வந்துப் பாருங்கண்ணே'னு சொன்னேன்.

Kamal Hassan Speech - Amaran 100

`அப்போ நல்லப் படம் இல்லைன்னு தெரிஞ்சும் பண்றியா, அதை எப்போ நிறுத்தப் போற'னு கேட்டார். அது இன்றுவரை என் மனதில் ரீங்காரமிடும் வார்த்தைகள். `நான் 10 படி ஏறுணா நீ 11 படி ஏறணும். நல்லா பண்ணு, நம்பிக்கையா பண்ணு, நீ திறமைசாலி' என்று சொன்னார். அதையே நான் இயக்குநருக்கும் சொல்றேன். இனியும் நிறைய படங்கள் நாங்கள் உங்களை நம்பி எடுப்போம். நீங்கள் கைக்குடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தான் அதை செய்யப்போகிறோம். தொடர்ந்து எங்களுக்கு உத்வேகம் அளித்து வரும் இந்திய சினிமா ரசிகர்களுக்கு நன்றி. இது உலக சினிமா ரசிகர்களாக மாற வேண்டும்" என்று பேசினார்.

``20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால்..." - மநீம 8-வது ஆண்டில் மனம் திறந்த கமல்ஹாசன்
Read Entire Article