ARTICLE AD BOX
பாலிவுட்டில், டோலிவுட் என நடன இயக்குநர் கணேஷ் ஆச்சாரியா புயலாய் சுற்றி வருகிறார். சமீபத்தில் வெளியான ̀புஷ்பா 2' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ̀கிசிக்', ̀சூசேக்கி' பாடலுக்கு இவர்தான் நடன இயக்கம் செய்திருந்தார்.

அப்பாடல்களின் நடனத்தை ரீல்ஸ்களில் ரீ கிரியேட் செய்த டிரெண்டும் பலருக்கு நினைவிருக்கலாம். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலிவுட் தனக்கு கிரெடிட் கொடுத்ததில்லை என கணேஷ் ஆச்சாரியா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தப் பேட்டியில் கணேஷ் ஆச்சாரியா, `` இந்தி சினிமாவைவிட தென்னிந்திய சினிமா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்கிறது. நான் மொத்த இந்தி சினிமாவையும் குறை சொல்லவில்லை. அங்கு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு போதுமான கிரெடிட் கிடைக்காத பிரச்னை இருக்கிறது. பாலிவுட்டில் அதிகப்படியான ஈகோ இருக்கிறது. அப்படியான ஈகோ இருக்கக்கூடாது. அல்லு அர்ஜூன் என்னை அழைத்து ̀மக்கள் என்னைப் பாராட்டுவதற்கு முக்கியக் காரணம் நீங்கள்தான்' எனக் கூறினார்.

பாலிவுட்டில் எவரும் அவர்களின் வெற்றிக்கு என்னை அழைத்து கிரெடிட் கொடுத்ததில்லை. ஹைதராபாத்தில் நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவுக்கும் என்னை அல்லு அர்ஜூன் அழைத்திருந்தார். அங்கு ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் படத்தின் வெற்றிக்காக விருதளித்தார்கள். அப்படியான ஒரு விஷயத்தை நான் முதல் முறையாக அப்போதுதான் பார்த்தேன். அது போன்றதொரு விஷயத்தை நான் ஏன் பாலிவுட் செய்வதில்லை?'' எனப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...