Afghanistan vs England: இங்கிலாந்தை பந்தாடிய அதிரடி அசுரன்! யார் இந்த இப்ராஹிம் சத்ரான்?

2 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை தனி ஆளாக புரட்டியெடுத்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் யார்? அவர் எப்படி அணிக்குள் வந்தார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 இங்கிலாந்தை பந்தாடிய அதிரடி அசுரன்! யார் இந்த இப்ராஹிம் சத்ரான்?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கியமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி அசத்தியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய இங்கிலாந்து அணி 317 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரான் 146 பந்தில் 177 ரன்கள் அடித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இப்ராஹிம் சத்ரான் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சதம் அடித்த முதல் ஆப்கானிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 

இப்ராஹிம் சத்ரான்

இப்போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ‍பேசும்பொருளாகியுள்ள 23 வயதான இப்ராஹிம் சத்ரான், டிசம்பர் 12, 2001 அன்று ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தார். நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக இப்ராஹிம் சத்ரான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது எப்படி? என்ப‌து குறித்து பார்ப்போம்.  ஜத்ரானின் கிரிக்கெட் மீதான காதல் இளம் வயதிலேயே தொடங்கியது. அவர் காபூலின் தெருக்களில் விளையாடத் தொடங்கினார். லோக்கல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் பயிற்சியாளர்கள் மற்றும் தேர்வாளர்களால் விரைவில் கவனிக்கப்பட்டார்.

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்லுமா? வாய்ப்பு எப்படி?

ஆப்கானிஸ்தான் அணி

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியில் அடியெடுத்து வைத்தார். 2017 இல் ஆப்கானிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிக்காக அவர் அறிமுகமானார். மேலும் அற்புதமான பேட்டிங் திறமையால் விரைவில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். தன்னுடைய சிறப்பான ஆட்டட்த்தின்மூலம் 2019 இல் ஆப்கானிஸ்தான் சீனியர் அணியில் அறிமுகமானார்.  ஜத்ரானின் திருப்புமுனை ஆட்டம் 2021ல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் வந்தது.

இந்த இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் அணியில் நிரந்தரமாக இடம்பிடிக்கத் தொடங்கி விட்டார். 2022ம் ஆண்டில், ஜத்ரான் ஐசிசியின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக அறிவிக்கப்பட்டார். இது அவரது விரைவான விளையாட்டுத் திறனுக்கு ஒரு சான்றாகும். அவரது தொழில்நுட்ப திறன்கள், மனோபாவம் மற்றும் அழுத்தத்தின் கீழ் விளையாடும் திறனுக்காக கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் வர்ணனையாளர்களால் அவர் பாராட்டப்பட்டார்.

இங்கிலாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

ஜத்ரான் ஒரு வலது கை பேட்ஸ்மேன். அவர் அதிரடிக்கு பெயர் பெற்றவர். சரியான புட்வொர்க் மூலம் கவர் டிரைவ், புல் ஷாட் மற்றும் லாஃப்டட் டிரைவ் உள்ளிட்ட ஷாட்களை நேர்த்தியாக ஆடுவதில் வல்லவர். ஜத்ரானின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று, வெவ்வேறு சூழ்நிலைகள் மற்றும் எதிராளிகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் ஆகும். சூழ்நிலையைப் பொறுத்து அவர் ஆக்ரோஷமாகவும் தற்காப்பாகவும் விளையாட முடியும் என்பதைக் காட்டியுள்ளார். மேலும் விளையாட்டைப் பற்றிய நல்ல புரிதலும் அவருக்கு உள்ளது.

7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இப்ராஹிம் சத்ரான் ஒரு சதம், 4 அரை சதங்களுடன் 541 ரன்கள் அடித்துள்ளார். 35 ஓடிஐ போட்டிகளில் 6 சதங்கள், 7 அரைசதங்களுடன் 51.06 ஆவரேஷுடன் 1,634 ரன்கள் குவித்துள்ளார். 44 டி20 போட்டிகளில் 1105 ரன்கள் அடித்துள்ளார். தன்னுடைய அற்புதமான பேட்டிங் திறமை, ஆக்ரோஷமான ஆட்ட பாணி மற்றும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றால் ஜத்ரான் கிரிக்கெட் உலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒருவீரராக மாறி விட்டார்.

ஒன் லாஸ்ட் டைம்! டீசர்ட்டில் சஸ்பென்ஸ் வைத்த 'தல' தோனி! இதுதான் கடைசி ஐபிஎல்?

Read Entire Article