ARTICLE AD BOX
Actress Radhika: நடிகை ராதிகா தான் சினிமாவிற்கு வந்த கதையையும், அவரது அழகிய நினைவுகளையும் நடிகை சுஹாசினியுடன் பகிர்ந்துள்ளார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஆட்டோகிராப் எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நான் வியந்த நடிகைகள்
சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த நிகழ்ச்சியில் பேசிய ராதிகா, "தமிழ் சினிமாவுல நான் வியந்து பாத்து அவங்கள மாதிரி நடிக்கணும்ன்னு ஆசைப்பட்டது சாவித்ரி அம்மாவ பாத்து தான். ஆனா அதுக்கு முன்னாடி, நான் இலங்கையில இருந்தப்போ, நான் என் அம்மாவோட முதல்ல பாத்த தமிழ் படம் அவள் ஒரு தொடர்கதை. இந்தப் படம் நான் பார்க்கும் போது எல்லாம் நடிக்கணும்ங்குற ஆசை எல்லாம் இல்ல. அந்த படத்துல சுஜாதாவோட நடிப்ப பாத்து நான் வியந்தேன். அந்தப் படத்துக்கு அப்புறம் தான் எனக்கு நடிக்க ஆசை வந்தது.
டிக்கெட் இல்லாத பயணி
கிழக்கே போகும் ரயில் படத்துல டிக்கெட் இல்லாத பயணி மாதிரி ஏறிட்டேன். நான் இலங்கையில இருந்து எங்க அப்பாவ பாக்க வந்தேன். அப்போ, பாரதிராஜா சார் படத்துக்கு இன்னொரு ஹீரோயின் தேடிட்டு இருந்தாங்க. அங்க, எங்க அப்பாவ பாக்க வந்த ஒருத்தர், பாரதிராஜா சார்கிட்ட என்ன பத்தி சொல்லிருக்காரு.
பாரதிராஜாவை வீட்டுக்குள்ள விடல
அதுக்கு அப்புறம் பாரதிராஜா சாரே என்ன பாக்க வீட்டுக்கு வந்தாரு. அவரு வந்தப்போ நான் செடிக்கு தண்ணி ஊத்திட்டு இருந்தேன். அவரு வந்தப்போ நான் ரொம்ப பயந்துட்டேன். ஏன்னா அப்போ தான் எங்க ஏரியாவுல கொலை நடந்தது. அதுனால அவர உள்ளையே விடல. அப்பா வந்து தான் அவர கூட்டிட்டு போனாரு.
சினிமா அனுபவம் இல்ல
ஆனா, நடிப்புக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாத என்ன அவரு இவ்ளோ பெரிய நடிகையா மாத்திருக்காரு. சினிமா குடும்பத்துல இருந்து வந்திருந்தாலும் நான் சினிமா பத்தியே தெரியாதவ. எனக்கு சாக்லேட் எல்லாம் கொடுத்து நடிக்க வச்சாரு. அந்த காலத்த எல்லாம் நினைச்சு பாத்தா ரொம்ப பிரம்மிப்பா இருக்கு. இந்தப் படத்தோட ஷூட்டிங்கு மேக்கப் போடுறப்போ எங்க அப்பா தான் வந்து பொட்டு வச்சி விட்டாரு. அவரோட பிளஸ்ஸிங் தான் நான் இவ்ளோ பெரியவளா வர என் கூடவே இருந்தது என தன் நினைவுகளை பகிர்ந்தார்.
நடிகையான நிரோஷோ
முன்னதாக தன் தங்கை பற்றி பேசிய ராதிகா, "என்னோட தங்கச்சி நிரோஷா சினிமாவுக்கு வர்றதுக்கு முதல் முதல்ல நான் தான் போட்டோஷூட் எடுக்குறேன். நான் கமல் சாரோட இருக்கும்போது, நான் நிரோஷா போட்டோ எல்லாம் பாத்துட்டு இருந்தேன். அப்போ, கமல் சார் அவளோட போட்டோ பாத்து இந்த பொன்னு யாருன்னு எல்லாம் கேட்டு விசாரிச்சாரு. அப்புறம் நான் அவள பத்தி சொன்னேன். அதுக்கு அப்புறம் தான் அவள பத்தி மணிரத்னம் சார்கிட்ட கயல் சொன்னாரு.
கொஞ்சம் தயக்கம்
அதுக்கு அப்புறம் அவள வச்சி முதல் படம் பண்ணும் போதே அவரு ஸ்விம்மிங் ட்ரெஸ்ல ஒரு பாட்டு எடுத்தாரு. அந்த காலத்துல எல்லாம் அந்த ட்ரெஸ் போட்டு நடிக்குறது எல்லாம் ஒரு மாதிரி இருக்கும். அத மணி சார்கிட்ட சொன்னதும் நான் ஷூட் பண்ணி முடிக்குறேன். உங்களுக்கு பிடிக்கலனா சொல்லுங்க. நான் வேற ஷூட் பண்ணிக்குறேன்னு சொன்னாரு. ஆனா இப்போ அது என்னோட ஃபேவரைட் பாட்டுல ஒன்னா இருக்கு" என்றார்.
என்னோட ரோல் மாடல்
இதன் பிறகு பேசிய நிரோஷா, "ராதிகா எனக்கு அக்கா. அதுக்கு அப்புறம் அவ அம்மாவா மாறிட்டா. நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் அவ ரொம்ப ஸ்டெடியா இருப்பா. எங்க குடும்பத்துக்கே அவ பெரிய சப்போர்ட். என்னோட ரோல்மாடல் எங்க அக்கா தான்" என கண்ணீர் மல்க பேசினார்.
