ARTICLE AD BOX
Actress Priyamani: நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு திரைப்பட இயக்குனர் முஸ்தபா ராஜுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது இந்து-முஸ்லிம் திருமணம் சமூக வலைத்தளங்களில் பல வெறுப்புக் கருத்துகளை சந்தித்தது. 'லவ் ஜிஹாத்' கிண்டல்கள் தன்னை எவ்வாறு பாதித்தது என்பதை பற்றி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், பிரியாமணி கூறி மனம் வருந்தியுள்ளார்.
'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டுகள்
சமீபத்தில் ஃபிலிம்ஃபேர்க்கு அளித்த பேட்டியில், பிரியாமணி கூறியதாவது, “எனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தபோது, என்னைப் பற்றி உண்மையாக அக்கறைபடுபவர்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். ஆனால், எதற்காக என்று எனக்குத் தெரியவில்லை, தேவையற்ற வெறுப்புச் செய்திகள் என்னைச் சுற்றி வர ஆரம்பித்தன, 'லவ் ஜிஹாத்' போன்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ச்சியாக வந்தன. நாங்கள் குழந்தைகள் பெற்றால், அவர்கள் ISIS இல் சேர்வார்கள் என்று கூட அவர்கள் கூறி விமர்சித்தனர்.”
பெரிதாக பாதித்தது
தான் பிரபலம் என்பதால் மக்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை தான் புரிந்து கொண்டாலும், அந்த கருத்துகள் தன்னைப் பெரிதும் பாதித்ததாக அவர் கூறினார். “நான் ஊடகத் துறையைச் சேர்ந்தவள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவள் என்பதால், நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், இதில் எந்த தொடர்பும் இல்லாத ஒருவரை ஏன் தாக்க வேண்டும்? அந்த நபர் யார் என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
மேலும் படிக்க: விஜய்யின் கடைசி படத்தில் இணைந்த பிரியாமணி..
மதம் பற்றிய பேச்சு
நிறைய செய்திகள் வந்ததால் அவை என்னை 2லிருந்து 3 நாட்களுக்கு உள்ளாகவே என்னை மிகவும் பாதித்தது. இப்போதும் கூட, நான் அவரோடு புகைப்படம் போட்டால், வரும் பத்து கருத்துகளில் ஒன்பது கருத்துகள் எங்கள் மதம் அல்லது சாதி பற்றியதாகவே இருக்கும்,” என்று கூறினார்.
தீயில் எண்ணெய் ஊற்ற விரும்பவில்லை
இந்த கருத்துகளுக்கு நானும் என் கணவரும் பதிலளிக்க மாட்டோம் என்று கூறிய பிரியாமணி, 'எறிகிற தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம்' என்று நினைக்கிறேன். 'ட்ரோல்களுக்கு பதில் கூறி ஒரு நிமிடத்தில் அனைத்தையும் கெடுக்க விரும்பவில்லை' என்றும் கூறினார்.
குடும்பத்தை பாதித்தது
முன்னதாக அவர் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய போது, விமர்சனங்கள் எல்லாம் என்னை பாதித்தது. என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தையும், குறிப்பாக என் தந்தை மற்றும் தாயையும் பாதித்தது. ஆனால், என் கணவர் எனக்கு பக்கபலமாக இருந்தார். அவர், 'என்ன நடந்தாலும், அனைத்தையும் முதலில் நான் சமாளிப்பேன். என் கையைப் பிடித்து, ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இரு' என்று கூறினார்.
மேலும் படிக்க: வன்மத்தை கக்கும் நெட்டிசன்ஸ்.. வேதனை தெரிவித்த பிரியாமணி
ஒன்றாக பயணிப்போம்
ஏனென்றால், நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்த காலத்திலேயே, எனக்கு எதிராக பல வதந்திகள் வந்தன. 'என்னுடன் இரு, என்னை நம்பு' என்று நான் அவருக்குச் சொன்னேன். நாங்கள் இணைந்தே இந்த முடிவை எடுத்தோம். எங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாகக் கழிக்க முடிவு செய்தோம். எனவே, புயலாகட்டும், சூரிய ஒளியாகட்டும், நாங்கள் ஒன்றாக இந்தப் பாதையில் நடப்போம். என உறுதியாக கூறினார்.
பிரியாமணியின் படங்கள்
பிரியாமணி சமீபத்தில் வெளியான மலையாளத் திரில்லர் 'ஆபிசர் ஆன் டியூட்டி' படத்தில் நடித்தார். 2024 ஆம் ஆண்டில், தெலுங்கு படம் 'பமா கலாபம் 2 படத்திலும், ஹிந்தி படங்களான 'ஆர்டிகிள் 370' மற்றும் 'மைதான்' ஆகியவற்றிலும் நடித்தார். அவர் இப்போது, நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார்.
