Actress Bhavana: 'நான் ஓகே சொல்றதுக்காக வெயிட் பண்ணாங்க.. தப்பு பண்ணாம நாம ஏன் பயப்படணும்.. '- நடிகை பாவனா

4 hours ago
ARTICLE AD BOX

பெரிய பிரேக் வரும்ன்னு எதிர்பாக்கல

அந்தப் பேட்டியில், "நான் தொடர்ந்து படங்கள்ள நடிச்சிட்டு இருந்தாலும் தமிழ்ல எனக்கு ஏன் படங்கள் வரலன்னு ஏன்னு எனக்கும் தெரியல. முன்ன எல்லாம் படம் பண்றதுக்கு எனக்கு எந்த கைடண்ஸும் இல்ல. என்ன காண்டாக்ட் பண்ண சரியான சான்ஸ் கிடைச்சிருக்காது. அசல் படத்துக்கு அப்புறம் தமிழ்ல இவ்ளோ பெரிய பிரேக் வரும்ன்னு நான் எதிர்பார்க்கல.

வெக்கேஷன் போற மாதிரி இருக்கும்

நான் அந்த டைம்ல என்னோட கெரியர பத்தி பெருசா யோசிச்சதே இல்ல. இப்போ எனக்கு இருக்க தெளிவு அந்த சமயத்துல இல்ல. ஷூட்டிங் போறது எல்லாம் எனக்கு வெக்கேஷன் போற மாதிரி இருக்கும். நான் அங்க விளையாடிட்டு தான் இருப்பேன். அசல் தான் தமிழ்ல என்னோட கடைசி படமா இருக்கும்ன்னு நான் நெனச்சே பாக்கல. நல்ல படம் வந்தா பண்ணலாம்ன்னு தான் இருந்தேன். என்ன எப்படி கான்டாக்ட் பண்றதுன்னு தெரியாததால பல படத்தோட ஆஃபர மிஸ் பண்ணிருக்கேன். நிறைய பேர் இந்த படத்துக்கு எல்லாம் உங்கள தான் யோசிச்சேன்னு எல்லாம் சொல்லுவாங்க.

நான் எதையும் பிளான் பண்ணல

எனக்கான அந்த இன்சிடென்ட் நடந்த அப்போ நான் எதையும் பிளான் பண்ணி பண்ணல. அதே சமயத்துல நான் எந்த தப்பும் பண்ணல. அதனால நான் உடனே போலீஸ் கம்ப்ளயண்ட் கொடுத்தேன். நான் தப்பு பண்ணாம நான் ஏன் பயப்படணும், அப்போ கூட இத பண்ண என்ன நடக்கும் அதப் பண்ணா என்ன நடக்கும்ன்னு எல்லாம் நான் யோசிக்கவே இல்ல. அப்போ என்ன சரின்னு பட்டதோ அத பண்ணுனேன்.

தப்பே பண்ணாம ஏன் பயப்படணும்

இப்போ கூட எனக்கு நான் என்னமோ பெரிய விஷயம் பண்ணேன்னு எல்லாம் தெரியல. நமக்கு சரின்னு படுற விஷயத்த பண்ண எதுக்கு பயப்படணும்ங்குறது மட்டும் தான். இதை எல்லாம் சொல்லாம இருந்தா தான் பராப்ளம். சொன்னா என்ன பிராப்ளம்.

ஒருவேள இத நான் சொல்லாம இருந்தா, பின்னாடி எல்லாரும் என்ன தான கேப்பாங்க. நீங்க ஏன் இத முன்னாடியே சொல்லலன்னு. அதுனால எனக்கு டக்குன்னு என்ன தோணுனதோ அத பண்ணிட்டேன்.இப்போ நான் நடந்து போறேன். அந்த சமயத்துல கீழ விழுந்தா உடனே தான் ஹாஸ்பிட்டல் போகணும். ஒரு மாசம் கழிச்சு போறேன்ினு சொனஅநா எல்லாமே வேஸ்ட். அதேதான் இங்கயும்.

ஓகே சொல்ல வெயிட் பண்ணாங்க

இந்த சம்பவம் நடக்குறதுக்கு முன்னாடியே நான் சில படங்கள கமிட் பண்ணிருந்தேன். இந்த மாதிரி விஷயத்தால என் மைண்ட் ரொம்ப அப்நார்மலா இருந்தது. என்னால சகஜமா இருக்க முடியல. அதுனால நான் ஷூட்டிங் வரல . வேற யாரையாவது வச்சு படம் பண்ணுங்கன்னு சொன்னேன். ஆனா, பிரித்விராஜ் சார் அப்புறம் டைரக்டர் எல்லாம் நீங்க எப்போ ஓகேன்னு சொல்றீங்களோ அப்போ ஷூட்டிங் வச்சிக்கலாம்னஅநு சொன்னாங்க. இவங்களால தான் நான் திரும்பவும் நடிக்க வந்தேன்.

எனக்கு பயம்

நான் மென்டலி ரொம்ப ஸ்ட்ராங் எல்லாம் இல்ல. எனக்கு நிறைய விஷயம் பயம். மக்கள் கூட்டம் அதிகமா இருக்குறது, புதுப்படம் கமிட் பண்றது, படம் ரிலீஸ் ஆகுறது இதுக்கெல்லாம் நிறைய பயப்படுவேன். ஆனா, அதெல்லாம் வெளிய காமிக்காம வேலைய செஞ்சட்டு வந்திடுவேன்.

சீரியஸா எடுக்க மாட்டேன்

எனக்கு எல்லாம் கரெண்ட்ல என்ன நடக்குதுன்னே தெரியாது. எதாவது நடந்தா அது ஒரு வாரம் ரெண்டு வாரத்துக்கு அப்புறம் தான் தெரியும். இதுக்காக என்ன எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. இதெல்லாம் தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன். எனக்கு எதையும் சீரியஸா எடுத்துக்க பிடிக்காது. அது நம்பள ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்கும். அதுவும் இல்லாம என ஆன்சைக்டி இருக்கு. எதாவது நடந்தா நான் அதை யார்கிட்டயும் ஷேர் பண்ண மாட்டேன். அது ஒரு நாள், ரெண்டு நாள்ல நானே சரி பண்ணிடுவேன்" என தன்னைப் பற்றி கூறுகிறார் நடிகை பாவனா.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article