Actor Sree: 'நா எதுலயும் உருப்படல.. நான் எவ்ளோ பெரிய ஜீரோன்னு புரிஞ்சுகிட்டேன்' நடிகர் ஸ்ரீ

20 hours ago
ARTICLE AD BOX

ஸ்க்ராட்ல இருந்து வந்தாரு

அந்தப் பேட்டியில், "எங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் சினிமா துறைக்கு வந்தாரு. இப்போ எல்லாம் பரவால்ல. அந்த காலத்துல ஒதுக்கப்பட்ட கம்யூனிட்டிக்கு எல்லாம் பெருசா வாய்ப்பே இருக்காது. அதுல இருந்து வந்து ஸ்க்ராட்ச்ல இருந்து எங்க அப்பா வளர்ந்தாரு. எங்க அப்பாவோட அப்பா கார் டிரைவரா வந்தாரு. திண்டிவனம் பக்கத்துல சோத்துப்பாக்கம்ங்குற ஊரு தான் அவரோடது. அது டொக்குல இருக்க ஒரு இடம். அந்த பேரு கூட யாருக்கும் தெரியாது.

எனக்கு எல்லாமே பெஸ்ட் தான்

அங்க இருந்து ஒரு மனுஷன் வந்து, படிப்பறிவு கூட இல்லாம சினிமாவுல மியூசிக் டைரக்டரா ஆகிருக்காரு. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல்ன்னு எல்லாருக்கும் மியூசிக் போட்டுருக்காரு. அதுக்கு பின்னாடி இருக்க உழைப்பு ஏவ்ளோ இருக்கும். இந்த வளர்ச்சியில எவ்ளோ அவமானம் இருக்கும். அந்த சமயத்துல அவருக்கு கிடைக்காதது எல்லாம் தன் பையனுக்கு கிடைக்கனும்ன்னு அவரு நினைப்பாரு. அதுனால எனக்கு எல்லாமே பெஸ்ட் தான் கொடுத்தாரு.

நான் உருப்படல

எல்லாரும் பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு சொல்லுவாங்க. ஆனா நான் எல்லாம் பார்ன் வித் கோல்டன் ஸ்பூனா இருந்தேன். ஆனா அதுவே தப்புன்னு நான் நினைக்குறேன். சின்ன வயசுல இருந்தே எனக்கு எல்லாமே கிடைக்கும்.

எங்க அப்பா பெஸ்ட் ஸ்கூல், பெஸ்ட் காலேஜ்ல என்ன படிக்க வச்சாரு. ஆனா எதுலயும் உருப்படல. அப்போ தான் நான் புரிஞ்சிகிட்டேன் நான் எவ்ளோ பெரிய ஜீரோன்னு. அதே சமயம் எங்க அப்பா எவ்ளோ பெரிய ஹீரோன்னும் அப்போ தான் தெரிஞ்சது. என்னைக்கு ஒரு புள்ள நீ யாரு மாதிரி வரணும்ன்னு கேட்ட அவரு இவருன்னு கைகாட்டாம தன்னோட அப்பாவ கை காட்டுதோ அப்போ தான் நாம ஜெயிச்சோம்.

பாட்டு பாடி உஷார் பண்ணாரு

எங்க அப்பா ரோஜா மலரே ராஜகுமாரி பாட்ட பாடிப்பாடியே எங்க அம்மாவ உஷார் பண்ணிட்டாரு. அந்த சமயத்துல அவர்கிட்ட எந்த காசும் இல்ல. அவரு போய் எங்க அம்மாவ பொன்னு கேக்கும் போது நம்பிக்கை தான் இருந்தது. நான் சினிமாவுல மியூசிக் டைரக்டர் ஆகிட்டு தான் உங்க பொன்ன கல்யாணம் பண்ணிப்பேனு சொல்லிட்டு வந்துட்டாரு.

வைராக்கியமா இருந்தாரு

அதுக்கு அப்புறம் அவரு சினிமாவுல மியூசிக் போட்டு வாங்குன முதல் சம்பளத்துல போய் வாங்குனது நகை தான். அவரு என்கிட்ட சொல்லிட்டே இருப்பாரு. அன்னைக்கு என்ன ஒருத்தன் சொன்னான் இல்ல. உன்னால எல்லாம் நகை போட முடியுமான்னு. அவன் என்ன பாக்குறான், பாக்கல. அது என் பிரச்சனை இல்ல. நான் நகை போடுவேன்னு வைராக்கியமா இன்னைக்கு வரைக்கும் நகை போட்டுட்டு தான் இருப்பாரு.

கூச்சப்பட மாட்டாரு

எங்க அப்பா எதுக்குமே கூச்சப்பட மாட்டாரு. ஒரு இன்ஸ்ட்ருமெண்ட் கொடுத்து பாட சொன்னா பாடிறனும். நடிக்க சொன்னா நடிக்கனும்ன்னு என்கிட்ட சொல்லுவாரு." என தன் தந்தை குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
Read Entire Article