ARTICLE AD BOX
Actor Sarathkumar: நடிகை ராதிகாவின் மகள் ரயான், அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் சரத் குமாரை எப்படி தனது தந்தையாக ஏற்றுக் கொண்டார். அவருக்கும் தனக்குமான உறவு குறித்து பேசியுள்ளார்.
எனக்கு எல்லாமே அப்பா தான்
அந்த பேட்டியில், " எனக்கு எல்லாமே என் அப்பா தான். அந்த வயசுல எனக்கு கிடைக்க வேண்டிய அன்பு எல்லாமே அவர்கிட்ட இருந்து கிடைச்சது. அவர் என்ன பாத்த நாள்ல இருந்து இன்னைக்கு வரைக்கு எனக்கான எல்லா சப்போர்ட்டும் அவர் தான் பண்றாரு.
சின்ன வயசுல இருந்தே நான் அப்பாவ (சரத் குமார்) பாத்திருக்கேன். அம்மாவோட ஃப்ரண்டா அவர நிறைய முறை பாத்திருக்கேன். கார்கில் டை்ல இவங்க எல்லாம் சேர்ந்து புரொகிராம் பண்ணாங்க, அதுனால அப்பாவ எனக்கு நல்லாவே தெரியும். அவர் தான் எனக்கு அப்பாவ வரப்போறாரான்னு எல்லாம் எனக்கு தெரியல. நான் சின்ன பொன்னுங்குறதால எனக்கு அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஏத்துக்க முடிஞ்சது.
பிரச்சனைன்னா அப்பாகிட்ட வந்திடுவேன்
சின்ன வயசுல இருந்தே இவரு என்மேல ரொம்ப அன்பா அக்கறையா இருக்குறதால ஏதாவது ஒரு விஷயத்த மட்டும் அவரப்பத்தி பேச முடியாது. எனக்கு எதாவது பிரச்சனைன்னா முதல்ல எங்க அப்பாக்கு தான் போன் பண்ணுவேன். அவருகிட்ட தான் அட்வைஸ் கேட்டு நிப்பேன். அதுனால என்னோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான முடிவு எல்லாம் அப்பாவ கேட்டு தான் செய்வேன். என்னோட லவ் விஷயத்த வீட்ல சொல்ல கூட ரொம்ப பயந்தேன். ஆன அவரு ரொம்ப சாப்ட்.
அவர் ஆடவும் இல்ல அழவும் இல்ல
நான் அப்பாவோட வளர்ச்சியையும் பாத்திருக்கேன். வீழ்ச்சியையும் பாத்திருக்கேன். அவரு அதுல இருந்து மீண்டு வந்ததையும் பாத்திருக்கேன். அவரு என்ன தான் வீழ்ந்தாலும் அவருக்கு அவர் மேல எந்த சந்தேகமும் வந்ததே கிடையாது. என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்ன்னு போயிடுவாரு. அவரு சக்சஸ் ஆன ஆடுறதும் இல்ல. பெயிலியர் ஆன அழறதும் இல்ல. அத எல்லாம் அவர்கிட்ட இருந்து கத்துக்கணும்.
அவங்களோட உறவு உறுதியானது
எங்க அப்பாவும் அம்மாவும் பிரண்ட்ஸா இருந்து குடும்ப வாழ்க்கைக்குள்ள வந்ததால அவங்களுக்குள்ள இருக்க அந்த அடித்தளம் ரொம்ப உறுதியா இருக்கு. ஒரு துறையில அவங்க ரெண்டு பேரும் தொடர்ந்து வேலை செய்யுறதால அவங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிறாங்க. அது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணவும் செய்யுது.
அம்மா சினிமாவு 47 வருஷமும் அப்பா சினிமாவு 45 வருஷத்துக்கு மேலயும் நிலைச்சு நிக்க காரணம் அவங்க கடின உழைப்பும் சினிமா மேல வச்சிருக்க காதலும் தான். அவங்க எப்போவும் நான் ஹீரோ, ஹீரோயினா தான் நடிப்பேன்னு இருந்ததே இல்ல. எந்த கேரக்டர் கொடுத்தாலும் அவங்க அதை செய்வாங்க.
என் லவ்வுக்கு சப்போர்ட்
நான் என் லவ்வ வீட்ல சொல்றதுக்கு முன்னாடியே எல்லாருக்கும் தெரிஞ்சு போயிடுச்சு. எங்க வீட்ல இதெல்லாம் ரொம்ப ஓபனா தான் இருக்கும். அவங்ககிட்ட மறைச்சு வச்சு ஒன்னும் ஆகப்போறதே இல்ல. நான் இன்னைக்கு அப்பாட்ட இத பத்தி எல்லாம் சொல்லிடனும்ன்னு முடிவு பண்ணிட்டு வந்தப்போவும் எனக்கு பயம். என் தம்பி தான் எனக்கு சப்போர்ட் பண்ணான். ஆனா, எங்க அப்பா, ஹோ இதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா அப்படின்னு கேட்டுட்டு, அவரே எனக்கு பக்கபலமா இருந்து என் கல்யாண வேலை எல்லாம் செஞ்சாரு.
என் பொன்னு அப்படியே அம்மா தான்
எனக்கு 2 குழந்தைங்க. ரெண்டு பேரும் சீக்கிரம் பொறந்துட்டாங்க. அவங்க பொறந்த சமயத்துல இருந்தே பிரச்சனை தான் ஓடிட்டு இருக்கு. என்னோட பொன்னு அப்படியே எங்க அம்மா தான். ஒரு ராதிகாவையே சமாளிக்க முடியாதபோது இன்னொரு ராதிகாவான்னு சில சமயம் இருக்கும். ஆனா, நான் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டேன். எனக்கு பொன்னு பொறந்தா என் அம்மா பேர தான் வைப்பேன்னு. நானும் எங்க அம்மாவும் ரொம்ப க்ளோஸ். அதே பாசம் என் பொன்னுக்கும் இருக்கணும்ன்னு நெனச்சேன்" என அவர் பேசியுள்ளார்.
