ARTICLE AD BOX
Actor Madhavan: எஸ். சசிக்காந்த் இயக்கியுள்ள 'டெஸ்ட்' படத்தில் நடிகர் மாதவனின் கதாபாத்திரமான சரவணனை அறிமுகப்படுத்தும் புதிய வீடியோவை நெட்ஃபிளிக்ஸ் தளம் வெளியிட்டது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த டிசரில், மாதவன், தன் கண்டுபிடிப்பிற்கான அனுமதி வாங்குவதற்காக போராடி வரும் நபராக காட்டப்பட்டுள்ளார்.
டெஸ்ட் திரைப்படம்
சித்தார்த், நயன்தாரா, மாதவன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள 'டெஸ்ட்' திரைப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. இது இந்த விளையாட்டு சார்ந்த திரைப்படம் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் புதிய டீஸர், மாதவன் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது.
சவால்களை எதிர்கொள்ளும் விஞ்ஞானியாக மாதவன்
புதிய டீஸரின் மூலம், மாதவன் விஞ்ஞானி சரவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது தெரியவந்துள்ளது. எரிபொருள் மின்னணு தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பை சரவணன் (மாதவன்) செய்துள்ளார். ஆனால், அதற்கான அனுமதி பெற அரசியல்வாதிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. சிலர் அதற்காக பணம் கேட்கின்றனர். தனது கனவை நனவாக்க பல சிரமங்களை சரவணன் சந்திக்கிறார். சவால்களை எதிர்கொள்கிறார். ஆனால், தனது இலக்கை அடைய முயற்சி செய்கிறார். இந்தப் புதிய டீஸரை தமிழ் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியில் விளையாட போராடும் சித்தார்த்
இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்துள்ளார். கடந்த இரண்டு சீசன்களில் சரியாக விளையாடாததால் அணியில் இடம் இழக்கிறார். ஓய்வு பெற வேண்டும் என சிலர் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், இந்தியாவிற்கு வெற்றி பெற்றுத் தர இன்னும் வாய்ப்புகள் வேண்டும் என அர்ஜுன் நினைக்கிறார். விமர்சனங்களுக்கு மத்தியில் கடுமையாக பயிற்சி மேற்கொள்கிறார். மீண்டும் அணியில் இடம் பெறுகிறாரா என்பது சித்தார்த் கதாபாத்திர டீஸரில் கேள்வியாக உள்ளது. '
தாயாக துடிக்கும் நயன்தாரா
டெஸ்ட்' படத்தில் தன் ஒரே ஒரு கனவை அடைய போராடும் இல்லத்தரசியாகவும், ஆசிரியையாகவும் நயன்தாரா 'குமுதா' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தான் தாயாக வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போக துடிக்கும் நபராக இதில் நயன்தாரா நடித்துள்ளார். இவரது டீசரின் படி, மாதவன் நயன்தாராவின் கணவராக நடித்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
ஓடிடி ரிலீஸ்
சசிகாந்த் இயக்கியுள்ள 'டெஸ்ட்' படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டதால், இப்போது இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக தயாராகியுள்ளது.
ஸ்ட்ரீமிங் தேதி
'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. தமிழில் உருவான இந்தப் படம், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
மேலும் படிக்க: என்ன பாத்து ஏன் இப்படி சொல்றாங்கனே தெரியல.. மாதவன் பேட்டி
நெட்ஃபிளிக்ஸில் 'ஆஃபிசர் ஆன் டியூட்டி'
மலையாள குற்றப் புனைவுத் திரைப்படமான 'ஆஃபிசர் ஆன் டியூட்டி' மார்ச் 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. குஞ்சாக்கோ போபன் நடித்த இந்தப் படம், மலையாளத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது.
ஆஃபிசர் ஆன் டியூட்டி' திரைப்படம் மார்ச் 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. பிரியாமணி, ஜகதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.

டாபிக்ஸ்