Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை

4 days ago
ARTICLE AD BOX

அஞ்சல் துறையின் சார்பில் ஆண்டுக்கு ரூ.550 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் திட்டம் சேலம் மாவட்டத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த சேகோ தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு தனியார் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சிறப்பு விபத்து காப்பீட்டு திட்டத்தை அஞ்சல் துறை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த வகையில், அஞ்சல் துறையின் சார்பில் ஆண்டுக்கு ரூ.550 செலுத்தினால் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற காப்பீட்டு திட்டங்களை விட இந்திய அரசின் அஞ்சல் துறை மிகக் குறைந்த விலையில் விபத்து காப்பீட்டினை வழங்கி வருகிறது. இதனால் சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மல்லூரில் உள்ள தனியார் சேகோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் 600-க்கும் மேற்பட்டோர் அஞ்சலக காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கான வருடாந்திர பிரிமீயத் தொகையினை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமே கட்டி வருகிறது.

இதனிடையே இந்த தனியார் சேகோ நிறுவன ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் பணி முடிந்து வீடு திருப்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு அஞ்சல் துறையின் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட உதவிக் கண்காணிப்பாளர் பரமேஸ்வரன், மிகக்குறைந்த பிரிமீயத்தில் ரூ.10 லட்சத்திற்கான விபத்துக் காப்பீட்டுத் தொகையைத் தரும் அஞ்சல் துறையின் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் சேலம் கிழக்குக் கோட்டத்தில் மட்டும் 4700 சேர்ந்துள்ளனர். மக்கள் அனைவரும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும். விபத்தில் உயிரிழப்பு நேரிட்டால் அவர்களுக்கு ரூ.10 லட்சத்துடன், அவர்களுடைய குழந்தைகளின் கல்வி செலவிற்கு மேலும் ரூபாய் ஒரு லட்சமும் வழங்கப்படும் என்றார். இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் விபத்தினால் ஏற்படும் சிறிய காயங்கள் முதல் காப்பீட்டு தொகையை பெற முடியும். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவ செலவிற்கு ஆயிரம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய அஞ்சல் வங்கியின் முதுநிலை மேலாளர் நல்லவள்ளிராஜா, தனியார் சேகோ நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article