9 கிரகங்களும் உச்சத்தில் இருந்தால்.. கும்ப ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

20 hours ago
ARTICLE AD BOX

9 கிரகங்களும் உச்சத்தில் இருந்தால்.. கும்ப ராசிக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

ஏப்ரல் மாத பலன்: ஏப்ரல் மாதத்தில் கும்பம் ராசிக்காரர்கள் பெறும் நற்பலன்கள் என்ன, பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஆரம்பமாகிறது. மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அன்று முதல் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிற காலகட்டம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, தென் நாட்டில் இயற்கைச் சீற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. பாதுகாப்பக இருக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். சனி ராகுவின் சேர்க்கை பல அதிர்ச்சியான விஷயங்களையும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏப்ரல் மாதத்தில் கும்பம் ராசியினர் பெறும் நல்ல பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

Astrology Kumbam

கும்பம்: கும்பம் ராசிக்காரர்கள் புத்தி கூர்மை கொண்டவர்கள். இந்த மாத தொடக்கத்தில் சனிப்பெயர்ச்சி நடந்து முடிந்திருக்கும். உங்கள் ராசியில் இருந்த சனி விலகி மீனத்துக்கு பெயர்ச்சி ஆகியிருப்பார். ஜென்ம சனி விலகலால் நல்ல பலன்கள் கிடைக்க போகிறது வேலை வாய்ப்பில் இருந்த த டைகள் நீங்கி எதிர்பார்த்தபடியான வேலை கிடைக்கும்.

உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கும். தன ஸ்தானம் வலுவடைகிறது. உங்களின் இரண்டாவது ஸ்தானத்தில் ஐந்து கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. உங்கள் ராசி அதிபதி சனி, உங்களுக்கு யோகாதிபதியான சுக்கிரன், சப்தமாவதி சூரியன், பஞ்சமாவதி புதன் மற்றும் ராகு இருக்கின்றனர். இது அற்புதமான அமைப்பு.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும். குடும்பத்துக்கே பல வகைகளில் வருவாய் கிடைக்கும். எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். முதலீட்டிலும் லாபம் கிடைக்கும். உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்திருமணத் தடையால் கஷ்டப்பட்டவர்களுக்கு, திருமணத் தடை நீங்கி திருமண முயற்சிகளில் நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பார்த்தபடியே நல்ல வரண் கிடைக்கும். திருமண வாழ்க்கைக்கு முக்கியமான குரு, சுக்கிரன் இரண்டுமே உங்களுக்கு சாதகமாக இருப்பது நல்ல பலன்களை கொடுக்கும்.

நீண்ட காலமாக நிலம், வீடு வாங்க நினைத்து தடை நிலவி வந்திருக்கும். இந்த மாதம் அந்த தடை விலகப் போகிறது. மனதில் நினைத்தபடியான சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் பழைய கடன்களை முழுவதுமாக அடைத்துவிட்டு பெரிய வீடு வாங்குவதற்கான சிந்தனைகள் உண்டாகும். அதற்கான முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

நகை, ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. மனதுக்கு பிடித்தவற்ற வாங்குவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் குறைந்து உடல்நலத்தில் முன்னேற்றம் இருக்கும். இரண்டாம் இடத்தில் சூரியன், சனி கிரகங்களின் சேர்க்கையால் இந்த காலத்தில் உங்களின் நிர்வாகத்திறமை நன்கு வெளிப்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும்.

தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இறங்கிய காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை துணையுடனான மனக்கசப்புகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதாயம் உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வார்த்தைகளில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

வழிபட வேண்டிய தெய்வம் - பங்குனி உத்திரம் தினத்தில் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதால் நல்ல பலன்கள் கிடைக்கும். பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மனை வழிபடுவதால் தடைகள் நீங்கும்.

More From
Prev
Next
English summary
This astrology article provides detailed information about the benefits, remedies, and things to be cautious about for Kumbam (Aquarius) in the month of April.
Read Entire Article