80களில் கோலோச்சிய நகைச்சுவை நடிகை காலமானார்... திரையுலகம் அதிர்ச்சி

14 hours ago
ARTICLE AD BOX

தமிழ்சினிமா உலகில் 80களில் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கியவர் நடிகை பிந்து கோஷ். இவர் உடல் பருமன் ஆனவர். ஆனால் அதையே தனது பிளஸ் பாயிண்டாக்கி காமெடியில் கலக்கினார். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்த இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிகிச்சை எடுத்து வந்த இவர் ஆளே அடையாளம் தெரியாத வகையில் உடல் மெலிந்து காணப்பட்டார். கமல் நடித்த முதல் படமான களத்தூர் கண்ணம்மா தான் இவருக்கும் முதல் படம். தனது 76வது வயதில் காலமானார்.

இவருக்கு பிபி, சுகர் இருந்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் இருதய ஆபரேஷன் செய்துள்ளார். இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் கவனிக்காமல் பெங்களூரு சென்றுவிட்டாராம். இளையமகன் தான் கவனித்து வந்தாரம். கடைசி காலகட்டத்தில் மருத்துவ செலவு, சாப்பாட்டுக்குக் கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார். 

என்பது குறிப்பிடத்தக்கது.

கோழி கூவுது, டௌரி கல்யாணம், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, தூங்காதே தம்பி தூங்காதே, கொம்பேறி மூக்கன், நவக்கிரக நாயகி, மங்கம்மா சபதம், விடுதலை, தாயம் ஒண்ணு, செந்தூர தேவி, திருமதி ஒரு வெகுமதி ஆகிய சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் இவர். இவரது மறைவு தமிழ்த்திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இவர் நடிகை மட்டும் அல்லாமல் டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் முறைப்படி நடனம் கற்று பல குழுநடனங்களில் ஆடியுள்ளார். 

Read Entire Article