ARTICLE AD BOX
Published : 27 Feb 2025 01:25 AM
Last Updated : 27 Feb 2025 01:25 AM
80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணி: பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் ரஷ்யா செல்கிறார்

புதுடெல்லி: ரஷ்யாவின் 80-ம் ஆண்டு போர் வெற்றி தின பேரணியில் விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே மாதம் ரஷ்யா செல்ல திட்டமிட்டள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோவியத் யூனியன் மற்றும் ஜெர்மனியின் நாஜி படைகள் இடையே கடந்த 1941-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இடையே போர் நடைபெற்றது. இது ரஷ்யாவில் ‘தி கிரேட் பேட்டிரியாட்டிக் வார்’ என அழைக்கப்படுகிறது. இதன் 80-ம் ஆண்டு வெற்றி தினத்தை மே 9-ம் தேதி,தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெறும் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பில், இந்திய ராணுவத்தின் அணிவகுப்பு பிரிவும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒத்திகைக்காக ஒரு மாதத்துக்கு முன்பே இந்திய ராணுவ வீரர்கள் ரஷ்யா செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விடுத்த அழைப்பை பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யா சென்றார். தற்போது இந்தாண்டு மே மாதம் அவர் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- மகா கும்பமேளா குறித்த மம்தாவின் கருத்து தவறு: பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி பதில்
- 2025-26ம் நிதியாண்டில் 10,000 கி.மீ தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்
- வாக்காளர் நலனுக்காகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உறுதி
- கும்பமேளா சென்று திரும்பும் வழியில் ஜேஎம்எம் எம்.பி. மகுவா விபத்தில் காயம்