ARTICLE AD BOX
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (பிப். 24) இந்திய பங்குச் சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 850 புள்ளிகளுக்கு மேலும், நிஃப்டி 243 புள்ளிகளும் சரிவுடன் முடிந்தன.
அதிகபட்சமாக ஐடி துறை பங்குகள் 3% வரை சரிந்தன. நிஃப்டி பட்டியலில் ஆட்டோ, நுகர்வோர் பொருள்கள் துறை மட்டும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 856.66 புள்ளிகள் சரிந்து 74,454.41 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.14 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243.40 புள்ளிகள் சரிந்து 22,552.50 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.07 சதவீதம் சரிவாகும்.