7வது ஊதியக் குழு அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி!

3 hours ago
ARTICLE AD BOX

7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இரண்டு மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையுடன், சம்பளமும் அதிகரிக்க உள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான DR அதிகரிபும் கிடைக்க உள்ளது. இது தொடர்பான முழு விவரங்கள் இதோ.

7th Pay Commission DA Hike

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தொடர்பான முக்கியமான புதுப்பிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட டிஏ மார்ச் மாதத்தில் நிலுவைத் தொகையுடன் சேர்த்துப் பெறப்படும். இதன் மூலம், மார்ச் மாதத்திற்கான ஊழியர்களின் சம்பளமும் அதிகரித்து வருகிறது. சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதைப் பார்ப்போம்.

Dearness Allowance

8வது சம்பளக் குழு குறித்து மத்திய அரசு ஊழியர்களிடையே விவாதம் நடந்து வருகிறது. மறுபுறம், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு எப்போது இருக்கும்? அது எவ்வளவு இருக்கும் என்ற யோசனையும் உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை அறிவித்துள்ளது.

DA Hike

அகவிலைப்படி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும். ஜனவரியில் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் பெறப்படும், இதில் இரண்டு மாத நிலுவைத் தொகையும் அடங்கும். ஜூலை முதல் டிசம்பர் வரை பெறப்பட்ட AICPI குறியீட்டின் அடிப்படையில் DA அளவு தீர்மானிக்கப்படுகிறது. இந்த முறை, அகவிலைப்படி 3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலையில், அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்து 53 சதவீதமாக இருந்தது. 

 

Govt. Employees

ஒவ்வொரு ஆண்டும் அகவிலைப்படி இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. மார்ச் மாதத்தில் ஹோலி பண்டிகையின் போது அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான நிலுவைத் தொகை உட்பட மார்ச் மாத சம்பளத்துடன் தரப்படும்.

Central Government

அகவிலைப்படி உயர்வு குறைந்தபட்ச ஊதியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது 53 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி, ஜனவரி மாத உயர்வுடன் 56 சதவீதமாக இருக்கும். தற்போது, ​​மாதத்திற்கு ரூ.15,000 அகவிலைப்படி பெற்றுவரும் ஒரு ஊழியருக்கு இனி ரூ.15,450 கிடைக்கும். அகவிலைப்படி அதிகரிக்கும்போது குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும். 7வது சம்பளக் குழுவின்படி, இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.

Read Entire Article