ARTICLE AD BOX

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த மே மாதம் வெளிநாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு வந்துள்ளார். இவர் திடீரென ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு 70 வயது முதியவரை கத்தியால் தாக்கினார்.
இதில் அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அதன் பின் அவர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் மீதும் தாக்குதல் நடத்தினார். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ஒரு 15 வயது சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுவன் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.