ARTICLE AD BOX

தமிழக பாஜக கட்சியின் சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாஜக மூத்த தலைவர்கள் வீட்டிற்கு சென்று நேரடியாக அவர்களை கைது செய்தனர். டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட பேரணி செல்ல இருந்த பாஜகவினரை கைது செய்து ஒரு இடத்தில் அடைத்து வைத்த நிலையில் தற்போது அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. அதாவது நீண்ட நேரம் ஆகியும் போலீசார் விடுவிக்காததால் கோபத்தில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டதும் சிலரைப் போல நெஞ்சு வலி என நாங்கள் நாடகம் போடுறோமா? இரவு 7 மணி வரை விடுவிக்க மறுப்பது ஏன்? நாங்கள் என்ன தீவிரவாதிகளை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த பெண்ணை தமிழிசை சௌந்தர்ராஜன் வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.