ARTICLE AD BOX
World Bizarre News: மகளிரின் மகத்துவத்தை போற்றும் பல்வேறு சமூகங்கள் நாடு உலகம் முழுவதும் நிரம்பியிருக்கிறது. பெண் அடிமைத்தனத்தை ஒழித்து ஆணுக்கு நிகர் பெண் என்ற சமத்துவ கொள்கை இந்த நவீன யுகத்தில் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மகளிருக்கு என பிரத்யேகமாக சில அம்சங்களை இருப்பதை பல்வேறு பகுதிகளில் நம்மால் காண முடிகிறது. உதாரணத்திற்கு, பெண்கள் நீண்ட கூந்தலை வளர்க்க வேண்டும் என்ற வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகிறது எனலாம்.
World Longest Women Hair: 6 அடி, 7 அடிக்கு நீண்ட கூந்தல்
இதில் பெண்களை கட்டாயப்படுத்தியோ, கட்டுப்படுத்தியோ செய்வது இல்லை. அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் இதுபோன்றவற்றை கடைப்பிடிப்பதே சரியானதாக இருக்கும் எனலாம். அந்த வகையில், சீனாவில் உள்ள Huangluo Yao கிராமத்தைச் சேர்ந்த ரெட் யாவ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அங்குள்ள வழக்கத்தை பின்பற்றி நீண்ட கூந்தலை வளர்ப்பார்களாம்.
இந்த கிராமம் தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் இருக்கிறதாம். இந்த கிராமத்தையே நீண்ட கூந்தல் கொண்ட கிராமம் என்றுதான் அழைப்பார்களாம். அங்கு வசிக்கும் மக்கள், அங்குள்ள வழக்கத்தின்படி ஆறடி அல்லது ஏழு அடிக்கு கூந்தலை வளர்ப்பார்களாம்.
மேலும் படிக்க | பணத்திற்காக கற்பை விற்ற இளம் பெண்.. ரூ.18 கோடிக்கு வாங்கிய பிரபல நடிகர்!
World Longest Women Hair: வாழ்நாளில் ஒருமுறை மட்டும்...
இவர்கள் ரெட் யாவ் பெண்கள் என்றழைக்கப்படுகிறார்கள். காரணம் இவர்களின் பாராம்பரிய உடை எப்போதும் சிவப்பு நிறத்தில்தான் இருக்குமாம். இவர்கள் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே தலைமுடியை வெட்டிக்கொள்வார்களாம். அதுவும் பெரும்பாலானோர் அவர்களின் 18 வயதை அடைந்த உடனே தலைமுடியை வெட்டிக்கொள்வார்களாம்.
அதுவும் வெட்டியை முடியை பிற்காலத் தேவைக்காக சேமித்து வைத்துக்கொள்வார்களாம். இது அவர்களின் சமூகத்தில் தொன்றுதொட்டு பின்பற்றப்பட்டு வருகிறதாம். இப்படி நீண்ட கூந்தலை வளர்ப்பதன் மூலம் ஆயுள் அதிகமாகும் என்றும் செழிப்பாக வாழ்க்கை அமையும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
World Longest Women Hair: பிரத்யேக ஷாம்பு... என்னென்ன அதில் இருக்கும்?
இந்த ரெட் யாவ் பெண்கள், தங்கள் நீண்ட கூந்தலை நன்கு கருமையான நிறத்தில் வைத்திருப்பார்களாம். அவர்களின் கூந்தலும் ஆரோக்கியமாக இருக்குமாம். அந்தளவிற்கு ஆரோக்கியமாகப் பராமரிக்க ஒரு சிறப்பு சுத்திகரிப்பு முறை இந்தச் சமூகத்து பெண்கள் பின்பற்றுகிறார்கள். அதாவது, நாம் ஷாம்பு போடுவதை போல், அவர்கள் இயற்கை பொருள்களாக தயாரிக்கப்படும் "ஷாம்பு"-ஐ பயன்படுத்துகிறார்களாம்.
அவர்கள் பயன்படுத்தும் அந்த பிரத்யேக ஷாம்புவின் முக்கியமான மூலப்பொருளே அரிசி ஊறவைத்த நீர் தானாம். அந்த புளித்த நீருடன் மூலிகைகள், தேநீர் திவிடு, பொமலோ தோல்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து அதனை கொதிக்க வைத்து, அதனை சுத்திகரித்து பயன்படுத்துவார்களாம். தலைமுடியை சீவுவதற்காகவே பிரத்யேகமான சீப்பை அவர்கள் வைத்திருக்கிறார்களாம். இந்த சீப்பை வைத்து, இந்த ஷாம்பு உச்சந்தலை முதல் தலைமுடியின் முனைகள் வரை பரவும் வகையில் சீவிக்கொள்வார்கள்.
World Longest Women Hair: சிகை அலங்காரத்தில் இத்தனை விஷயங்கள்
இந்த ரெட் யாவ் பெண்களில், சிகை அலங்காரங்கள் மூல் அவர்களின் வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டங்களை எடுத்துக்காட்டுவார்களாம். அதாவது, தலைமுடியை மறைக்க ஒரு பெண் கருப்பு தாவணியை அணிந்திருந்தால் அவர் திருமணமாகாதவர் என அர்த்தம். அவர்களின் தலைமுடி புனிமாக கருத்தப்படுகிறது. எனவே மற்றவர்களின் கண்களுக்கு அவை புலப்படக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்கின்றனர்.
அதேபோல், தலைமுடி தலையைச் சுற்றி மூடப்பட்டிருந்தால், அவர் திருமணமாகி, குழந்தையில்லாதவர் என பொருள் ஆகும். தலைமுடியை நன்றாக கட்டி, தலையில் பெரிய கட்டாக வைத்திருந்தால் அவர் திருமணமாகி குழந்தைகளை பெற்றவர் என அர்த்தமாம்.
மேலும் படிக்க | உடலுறவு மாரத்தான் பிரபலம்... ஆபாச பட நடிகையின் அடுத்த டார்க்கெட் - பெரிய ஷாக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ