65 வகையான நோய்களை பரப்பும் ‘ஈ’ - வீட்டில் இருந்தால் பேராபத்து!

3 days ago
ARTICLE AD BOX

‘ஈ’ வீடுகளில் காணப்படும் மிகவும் பொதுவான பூச்சிகளில் ஒன்றாகும். ஈக்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ஈக்களின் கண்கள் அசைவதில்லை. அதுமட்டுமின்றி எல்லாத் திசைகளிலும் இவற்றால் பார்க்க முடியும். வீட்டில் ஈக்கள் சுற்றி பறக்கும் போதும், உணவுகளின் மீது அமரும் போது அருவருப்பாக இருக்கும். கொசுக்கள் போல் இவை தொல்லை இல்லை என்பது போல தெரிந்தாலும் அதில் உண்மை இல்லை. நோயை உண்டாக்கும் கிருமிகளை ஈக்கள் சுமந்து செல்கின்றன என்பதால் அவற்றை அகற்றுவது முக்கியம்.

ஏனெனில் அவை குப்பை, மலம் மற்றும் அழுகும் அல்லது கெட்டுப்போன உணவு உள்ளிட்ட அழுக்குகளில் இனப்பெருக்கம் செய்து பின்னர் வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள உணவுப்பொருட்களில் அமரும் போது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகின்றன. ஈக்களை கன்ட்ரோல் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல.

வீட்டு ஈக்கள் மக்கள் வசிக்கும் கண்டங்களில், வெப்ப மண்டலத்திலிருந்து, மிதவெப்ப மண்டலம் வரை அனைத்து கால நிலைகளிலும், கிராமம் முதல் நகர்ப்புறம் வரை பல்வேறு சூழல்களிலும் காணப்படுகின்றன. இந்த வீட்டு ஈ, மனிதன் வசிக்கும் வீடு முதல் கோழி, பன்றி பண்ணைகள் வரை எல்லா இடங்களிலும் காணப்படும் பொதுவான இனமாகும்.

இதையும் படியுங்கள்:
நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கும் இயற்கைக் கொசு விரட்டிகள்!
House Fly

ஈக்கள் முட்டையிடும் இடங்களை அடையாளம் காண்பது மிகவும் அவசியம். இது மூடப்படாத குப்பைத் தொட்டி, செல்லப்பிராணி உணவு கிண்ணம், மோசமான சுகாதாரம் உள்ள இடம், ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் மூடப்படாத விரிசல்கள் போன்ற இடங்களில் முட்டையிடும். இனப்பெருக்கம் செய்யும் இடம் சுத்தம் செய்யப்பட வேண்டும் அல்லது அகற்றப்பட வேண்டும். இனப்பெருக்கம் செய்யும் இடத்தை அகற்றாவிட்டால், ஈக்கள் தொல்லை தொடரும்.

ஒரு வீட்டு ஈயின் ஆயுட்காலம் 15 முதல் 25 நாட்கள் ஆகும். முட்டை, லார்வா, கூட்டுப்புழு, முதிர்ந்த ஈ நிலை என உருமாற்றம் அடையும். வெப்பநிலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பொறுத்து இது மாறுபடும். சூடான வீடுகளில் வசிக்கும் ஈக்கள் நீண்ட காலம் வாழ்வது மட்டுமின்றி ஈக்களுக்கு வாழ நல்ல சூழ்நிலை கிடைத்தால் 60 நாட்கள் வரை கூட உயிர் வாழும் தன்மை கொண்டவை. இது வாழும் காலத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 தடவை இனப்பெருக்கம் செய்து புதிய தலைமுறை ஈக்களை உருவாக்கி விடுகிறது.

இதையும் படியுங்கள்:
கொசு, கரப்பான் பூச்சிகளின் தொல்லைகளிலிருந்து விடுபட 8 எளிய வழிகள்!
House Fly

வயது வந்த வீட்டு ஈக்கள் உணவுக்கழிவுகள் அல்லது விலங்குகளின் மலத்தை முட்டையிடும் இடங்களாக தேடுகின்றன. அவை குப்பைத்தொட்டிகள், சாக்கடைகள் மற்றும் அழுகிய உடல்களின் மீது அமர்ந்து முட்டையிடும். இவை ஏதாவது ஒரு சூழ்நிலையில் வீடுகளுக்குள் நுழையும் போது உணவு மற்றும் தண்ணீரில் கிருமிகளை கலந்து விடும். ஈக்கள் நோய் மற்றும் தொற்று அபாயத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி இதனால் டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா, போலியோமைலிடிஸ், ஆந்த்ராக்ஸ், துலரேமியா, தொழுநோய் மற்றும் காசநோய் உட்பட குறைந்தது 65 நோய்களை மனிதர்களுக்கு கடத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

எந்த சூழ்நிலையிலும் தன்னை தகவமைத்துக் கொண்டு வாழும் இந்த ஈக்களை தான் விண்வெளிக்கு அனுப்பி பரிசோதனை செய்ய உள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் ஈ தொல்லையா? இத செஞ்சாலே போதுமே! 
House Fly

வீட்டு ஈக்களை கட்டுப்படுத்த :

குப்பைத் தொட்டிகளை தவறாமல் காலி செய்வதன் மூலம் உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். உணவு பொருட்களை சரியாக மூடி வைக்கவும். கசிவுகளை உடனடியாக சுத்தம் செய்யவும். குப்பை பைகளை இறுக்கமாக மூடவும். கூடுதலாக, பறக்கும் பொறிகள், ஃப்ளைபேப்பர், அத்தியாவசிய எண்ணெய்கள் (எ.கா., சிட்ரோனெல்லா, மிளகுக்கீரை) போன்ற இயற்கை விரட்டிகளைப் பயன்படுத்தி ஈக்களை கட்டுப்படுத்தலாம். மேலும் ஈக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைவதைத் தடுக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும்.

Read Entire Article