ARTICLE AD BOX

சென்னை : 2025 – 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது. முதலில் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
பின்னர், கேள்வி பதிலின் போது, கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என நாகை மாலி கேள்விக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலளிக்கையில், “இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன்படி, வேட்டைக்காரனிருப்பு பகுதியில் போதுமான குழந்தைகள் மையங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இப்பொது அம்மையமானது பயனடைந்து அனைத்து பயனாளிகளுக்கும் போதுமானதாக உள்ளது. இதனால், புதியதாகமையங்கள் அமைக்க வேண்டிய தேவை இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, தனது விருகம்பாக்கம் தொகுதியில் தனியார் கட்டடங்களில் இயங்கும் 3 குழந்தைகள் மையத்திற்கு நான் வாடகை செலுத்துகிறேன் என்று கூறியதோடு, அரசு சார்பில் பட்டா இல்லாத நிலங்கள் குழந்தைகள் மையத்திற்கு தரப்படுமா என பிரபாகரராஜா கேள்வி எழுப்பினார்.
எங்கெங்கு இடம் கிடைத்ததோ அங்கெல்லாம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பொது பட்டா வழங்கப்படாத இடங்கள்,நத்தம் புறம்போக்கு இடங்கள் கட்டிட்டம் சிரமமாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா கருத்தை அரசு ஏற்று கொல்லப்படும். மேலும், வாடகை கட்டடங்களில் இயங்கும் குழந்தைகள் மையத்திற்கு வழங்கும் வாடகை ரூ.8,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார்.