50 ஆண்டுகளுக்கு ஒருமுறை சார்ஜ் போட்டால் போதும் – சீனா கண்டுபிடித்த அற்புதம்!

10 hours ago
ARTICLE AD BOX

ஸ்மார்ட் போனில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 ஆண்டுகளுக்கும் நிற்கும்படி இருக்கும் ஒரு அதிசய பேட்டரியை சீனா கண்டுபிடித்திருக்கிறது.

 நமது போன்களுக்கும் லேப்டாப்பிற்கும் சார்ஜை நிற்கவைப்பதற்கு உதவும் ஒன்றுதான் பேட்டரி. இது இல்லாமல் எந்த பொருளிலும் சார்ஜ் வைத்திருக்க முடியாது. ஒருவேளை இது பழதாகிவிட்டாலோ, பழுதடைந்துவிட்டாலோ சார்ஜ் சீக்கிரம் குறைந்துவிடும். பொதுவாக ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், அந்த போனை ஒருநாள் சார்ஜுடன் பயன்படுத்தலாம். சில பேர் அதிகம் பயன்படுத்தி சீக்கிரமே சார்ஜை போக்கிவிடுவார்கள். ஒருநாளைக்கு இரண்டு மூன்று முறை சார்ஜ் ஏற்றுவார்கள்.

இதை சரி செய்யதான் முதலில் பவர் பேங்க் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், மக்கள் நெடுந்தூரம் செல்லும்போதும், சில இடங்களுக்கு செல்லும்போதும் இந்த பவர்பேங்குகளும் சில நேரங்களுக்கு பிறகு பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

இவையனைத்திற்கும் நிரந்தர தீர்வொன்றை சீனா கண்டுபிடித்துள்ளது. அதாவது சீனாவின் பீட்டாவோல்ட் (Betavolt) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் அணுக்கரு மின்கலத்தை (Nuclear Battery) கண்டுபிடித்துள்ளது. இது 50 வருடங்களுக்கு மின்சாரம் வழங்கும் திறன் கொண்டதாகும்.

இந்த பேட்டரி ஒரு நாணயத்தைவிட சிறியதாகும். இது செல்போன்கள், டிரோன்கள், பேஸ்மேக்கர்கள் மற்றும் சென்சார்கள் போன்ற சிறிய மின்னணு சாதனங்களுக்கு சக்தியளிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த பேட்டரி நிக்கல்-63 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஸ்மார்ட்போன்களில் லித்தியம் பேட்டரி தான் பயன்படுத்தப் படுகிறது. இது கதிர்வீச்சுக்கு உட்படுத்தப்படும் போது மின்சாரத்தை உருவாக்கும் ஒரு கதிரியக்க ஐசோடோப்பு ஆகும்.

இதுதான் உலகின் முதல் மினியேட்டரைஸ் செய்யப்பட்ட அணுசக்தி அமைப்பு (world’s first miniaturized atomic energy system) என்று புகழப்படுகிறது. இதன்மூலம் அணு சக்தியால் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.  50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யாமல் அல்லது பராமரிப்பு இல்லாமல் நிலையான மின்சாரத்தை இந்த பேட்டரியால் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பீட்டாவோல்ட் கூறியதாவது, “ முதல் அணுசக்தி பேட்டரியால் 100 மைக்ரோவாட் ஆற்றலையும், 3V மின்னழுத்தத்தையும் வழங்க முடியும்.” என்றார். 

இதையும் படியுங்கள்:
AI யுகத்தில் நுழையும் Zoho… தாக்குப்பிடிக்குமா?
Betavolt
Read Entire Article