ARTICLE AD BOX
மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள குராப் என்ற கிராமத்தில் அசோக் சிங் என்பவர் வசித்து வருகின்றார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமியை கற்பழித்தது மட்டுமல்லாமல் கொலையும் செய்துள்ளார். இது குறித்து சிறுமையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் அசோக் சிங் மீதான குற்றசாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அதன்படி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றத்திற்காக அசோக் சிங்கருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்நிலையில் குற்றம் நடந்த 54 நாட்களில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி போலீசார் மற்றும் நீதித்துறைக்கு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.