ARTICLE AD BOX
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் துபாய் நகரில் இன்று பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து விளையாடி வருகிறது.
பாபர் அசாமை வழியனுப்பிய ஹார்டிக் பாண்டியா :
அந்த வகையில் தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களை விளையாடி முடித்துள்ள வேளையில் 2 விக்கட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக நிச்சயம் பாகிஸ்தான அணி 250 முதல் 270 வரை இலக்காக நிர்ணயிக்கும் என்பதனால் இந்த போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் ஹார்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து ஹார்டிக் பாண்டியா செய்த செயல் ஒன்று ரசிகத்தின் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே கடந்த பல தொடர்களாக பேட்டிங் ஃபார்மின்றி தவித்து வந்த அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஹைஸ்கோரிங் போட்டியிலும் மெதுவான ஆட்டத்தை விளையாடி விமர்சனத்தை பெற்றிருந்தார்.
அதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அதிரடியாக இன்னிங்சை தொடங்கிய அவர் 26 பந்துகளை சந்தித்து 5 பவுண்டர்களை விளாசி 23 ரன்கள் எடுத்து தனது இன்னிங்சை அதிரடியாக விளையாடிய வேளையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கே.எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததை அடுத்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
இதையும் படிங்க : முதல் ஓவரிலேயே 11 பந்துகளை வீசியதன் மூலம் 3 ஆவது இந்திய பவுலராக மோசமான சாதனையை நிகழ்த்திய – முகமது ஷமி
இப்படி பாபர் அசாம் ஆட்டமிழந்து வெளியேறிய போது இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா அவரை நோக்கி கை செய்கையின் மூலம் “பை பை” என்று காட்டி அவரை வழி அனுப்பி வைத்தார். அவரது இந்த கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகளவு கவனத்தினை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 5 பவுண்டரியுடன் அதிரடி காட்டிய பாபர் அசாமை “பை பை” சொல்லி வழியனுப்பிய பாண்டியா – என்ன நடந்தது? appeared first on Cric Tamil.