5 நாட்கள் சரிவுக்கு பிறகு ஏற்றத்துடன் முடிந்த இந்திய பங்குச் சந்தை!

4 hours ago
ARTICLE AD BOX

மும்பை: உலகளாவிய வர்த்தகத்தில் இன்று ஏற்றம் கண்ட நிலையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் இன்று வங்கிப் பங்குகளை கொள்முதல் செய்ததையடுத்து பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 0.5 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 547.44 புள்ளிகள் உயர்ந்து 74,376.35 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 341.04 புள்ளிகள் உயர்ந்து 74,169.95 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 111.55 புள்ளிகள் உயர்ந்து 22,508.75 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸ் பேக்கிலிருந்து பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, சோமேட்டோ மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது. இருப்பினும் ஐடிசி, நெஸ்லே, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவை சரிந்து முடிந்தது.

பஜாஜ் ஃபின்சர்வ், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், ட்ரெண்ட், ஆக்சிஸ் வங்கி ஆகியவை நிஃப்டியில் உயர்ந்தும் பிரிட்டானியா, ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, பிபிசிஎல், ஐடிசி ஆகியவை சரிந்து முடிந்தது.

ரிசர்வ் வங்கி சனிக்கிழமை வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்ததை அடுத்து, இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 5.30 சதவிகிதம் உயர்ந்தன. இருப்பினும் ரூ.2,100 கோடி கணக்கில் முரண்பாடு தொடர்பான தீர்வு நடவடிக்கைகளை, இந்த மாதத்திற்குள் முடிக்குமாறு வங்கி வாரியத்திற்கு அறிவித்ததையடுத்து வர்த்தக முடிவில் இண்டஸ்இண்ட் வங்கியின் பங்கு விலையானது 0.72 சதவிகிதம் வரை அதிகரித்து ரூ.676.95 ரூபாயாக முடிவடைந்தது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய், ஹாங்காங் மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் உயர்ந்தும் முடிந்தது. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று எழுச்சியில் முடிந்தது.

ஒரு சிறிய நெருடல் இருந்தபோதிலும், உலகளாவிய சந்தைகளில் உள்ள நம்பிக்கையால் உள்ளூர் குறியீடுகளில் சற்றே மீட்சி தென்பட்டது. எவ்வாறாயினும், இந்தியா உள்ளிட்ட முக்கிய பொருளாதாரங்களில் அமெரிக்க கட்டணக் கொள்கைகளின் தாக்கத்தைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை இருப்பதால், முதலீட்டாளர்கள் எந்தவொரு அழைப்பையும் ஏற்பதற்கு முன்பு உலகளாவிய நிகழ்வுகளைக் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மேலும் காய்கறிகள், எண்ணெய் மற்றும் குளிர்பானங்கள் போன்ற உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக, பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 2.38 சதவிகிதமாக உயர்ந்தது.

சுகாதாரம் மற்றும் நிதித் துறைகளில் வலுவான செயல்திறனால் உந்தப்பட்டு உயர்ந்து முடிந்த நிலையில், கட்டணம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பு சற்றே குறைந்தது.

ஜி ஆர் இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ், ஹேப்பிஸ்ட் மைண்ட்ஸ், ரூட் மொபைல், வர்ரோக் இன்ஜினியரிங், சொனாட்டா சாப்ட்வேர், மஹிந்திரா லைஃப், அபர் இண்டஸ்ட்ரீஸ், வேதாந்த் பேஷன்ஸ், என்எம்டிசி ஸ்டீல், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், ஷீலா ஃபோம், பாலாஜி அமின்ஸ், சிசிஎல் புராடக்ட்ஸ், எல்டிஐஎம்ட்ரீ, டிடிகே பிரெஸ்டீஜ், சுந்தரம் ஃபாஸ்டென்சர்ஸ், செரா சானிட்டரிவேர், ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பேங்க், நுவோகோ விஸ்டாஸ், கேலக்ஸி சர்பாக்டான்ட்ஸ் உள்ளிட்ட 490 பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 52 வார குறைந்த விலையைத் தொட்டன.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த (வியாழக்கிழமை) ரூ.792.90 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் பங்குச் சந்தைகள் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

2025ல் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1.42 லட்சம் கோடி பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.06 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 71.33 அமெரிக்க டாலராக உள்ளது.

வியாழக்கிழமையன்று சென்செக்ஸ் 200.85 புள்ளிகள் குறைந்து 73,828.91 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 73.30 புள்ளிகள் சரிந்து 22,397.20 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதையும் படிக்க: ஐந்து நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.93 ஆயிரம் கோடியாக சரிவு!

Read Entire Article