47 வயசு ஆகிடுச்சு… நான் அப்படி நடிப்பதை நிறுத்திவிட்டேன்…. நடிகை ஜோதிகா அதிரடி..!!

4 days ago
ARTICLE AD BOX

பிரபல நடிகை ஜோதிகா கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலிவுட் சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவர் ஹிந்தியில் நடிக்கவில்லை. இவர் தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு நடித்த வாலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக ஜொலித்தார். இவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு  சினிமாவிலிருந்து பல வருடங்கள் விலகி இருந்த நிலையில் மீண்டும் 36 வயதிலேயே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இந்நிலையில், நேற்று டப்பா காட்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஜோதிகா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது, “காதல் மையப்படுத்திய படங்களில் நடிப்பதை 27 வயதிலேயே நான் நிறுத்திவிட்டேன். இப்போ எனக்கு 47 வயதாகிறது. தற்போது, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Read Entire Article