4 மாதத்தில் 3 படம் ஹிட், ரூ.850 கோடி வசூல்: நடிகை மீனாட்சி சௌத்ரி செம குஷி..

3 hours ago
ARTICLE AD BOX
3 hits and 850 crore collection actress meenakshi chaudhary

லக்கி குயினாக மீனாட்சி சௌத்ரி பேசப்படுகிறார். எப்படி என விவரம் பார்ப்போம்..

தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது மீனாட்சி செளத்ரிக்கு. கடந்த 4 மாதங்களில் 3 ஹிட் படங்கள், வெவ்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளன. இப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் மொத்தம் 850 கோடி என கூறப்படுகிறது.

மீனாட்சிக்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த படம் தி கோட். வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி செளத்ரி.

அடுத்த ஹிட் படம் லக்கி பாஸ்கர். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனு. இப்படம், ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

பின்னர் தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் மீனாட்சி செளத்ரி நடித்த படம் ‘சங்கராந்திக்கு வஸ்துனாம்’. வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தில்ராஜு தயாரித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

ஆக, 4 மாதங்களில் 3 ஹிட் படங்கள் மூலம் ரூ.850 கோடிக்கு மேல் வசூலித்து லக்கி குயினாக பறந்து வருகிறார்.

3 hits and 850 crore collection actress meenakshi chaudhary3 hits and 850 crore collection actress meenakshi chaudhary

The post 4 மாதத்தில் 3 படம் ஹிட், ரூ.850 கோடி வசூல்: நடிகை மீனாட்சி சௌத்ரி செம குஷி.. appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article