4 நாட்களில் வசூலை வாரிக்குவித்த டிராகன் படம்.. இத்தனை கோடியா

1 day ago
ARTICLE AD BOX

டிராகன்

கடந்த வெளிவந்த டிராகன் திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான திரைப்படம் டிராகன்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் - ஏஜிஎஸ் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம் இது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் youtube பிரபலங்கள் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி திரையரங்கை அதிர வைத்திருந்தனர். மக்களிடையே சிறந்த வரவேற்பை முதல் நாளில் இருந்தே பெற்று வரும் டிராகன் திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில் 4 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 59 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் ப்ளாக் பஸ்டர் லவ் டுடே படத்தின் வசூல் சாதனையை இப்படம் முறியடித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article