ARTICLE AD BOX
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை நீலிமா ராணி தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த கஷ்டங்கள் பற்றி மனம்விட்டு பேசி இருக்கிறார்.

The true face of actress Neelima Rani: From debt to success : நீலிமா ராணி, சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நடித்து பலரின் மனதை வென்றவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 90களில் இருந்து தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்தார். குறிப்பாக “வாணி ராணி” மற்றும் “தாமரை” போன்ற பிரபலமான தொடர்களில் நடித்திருந்தார். தனது வாழ்க்கையில் பல சோதனைகளை கடந்து வந்துள்ள நீலிமா, அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த அனுபவங்கள் பலருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

21 வயதிலேயே இசைவாணன் என்பவருடன் நீலிமாவுக்கு திருமணம் ஆனது. திருமணம் முடிந்த 6 மாதங்களில் அவரது தந்தை இறந்துவிட்டாராம். தந்தையின் இழப்பை நீலிமாவால் ஜீரணிக்க முடியவில்லையாம். அந்தக் கால கட்டத்தில் பெரும்பாலும் கோயில்களுக்கு சென்றும், புத்தகங்களை படித்தும், மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டு வந்தாராம் நீலிமா.

2017-ஆம் ஆண்டு தன் கணவருடன் சேர்ந்து 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்க முடிவு செய்த நீலிமா, அதற்காக பணத்தை கடன் வாங்கி அந்த படத்தை எடுத்திருக்கிறார், ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வரவில்லையாம். இதனால் அப்படத்தை குப்பையில் தான் போட்டோம் என கூறிய நீலிமா, இதனால் ஏற்பட்ட பெரும் நஷ்டம் தங்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்ததாக கூறினார். வாழ்க்கையில் மீண்டு வர வேண்டும் என முடிவெடுத்து மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் நீலிமா.
இதையும் படியுங்கள்... “என் மார்பை பற்றி கமெண்ட் வரும்போது இந்த பதிலை சொல்ல தோணும்..” நீலிமா ராணி தரமான பதிலடி..

“வாணி ராணி”, “தாமரை”, “தலையணை பூக்கள்” போன்ற தொடர்களில் நடித்தபோதும் கடன் தொல்லையால் வாடகை வீட்டுக்கு கூட செல்ல முடியாமல், நண்பரின் வீட்டில் தங்கியிருந்ததாக கூறிய நீலிமா, தங்களின் டார்கெட் வெற்றியை நோக்கி இருந்ததால் தோல்வியை ஏற்றுக்கொள்ள தாங்கள் தயாராக இருந்ததாகவும், அதனால் தான் அதிலிருந்து மீண்டும் வந்து தற்போது நல்ல நிலையை அடைந்திருப்பதாகவும் கூறினார்.

சினிமாவில் தயாரிப்பாளராக தோற்றாலும், ஒரு நாள் தயாரிப்பாளராக வெல்ல வேண்டும் என்கிற முனைப்போடு கடந்த 2017-ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான என்றென்றும் புன்னகை, நிறம் மாறாத பூக்கள் போன்ற சீரியல்களை தயாரித்தார் நீலிமா. சீரியலை தயாரித்தாலும் ஒரு நாள் கண்டிப்பாக படம் தயாரித்து வெற்றி காண்போம் என்று நம்பிக்கையுடன் கூறி இருக்கிறார் நீலிமா. மேலும் நாம் சோர்ந்துபோய் உட்கார்ந்து விட்டால் நமக்கு யாருமே கை கொடுக்க வரமாட்டாங்க... நமக்கு நாம தான் கை கொடுத்து உதவ வேண்டும் என உத்வேகம் அளிக்கும் விதமாக நீலிமா பேசிய அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சீரியல் இனி செட் ஆகாது! கநடிப்புக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி!