ARTICLE AD BOX
செய்தியாளர்: பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்
பூமி தோன்றியதில் இருந்து இதுவரை எண்ணற்ற முறை விண்கற்கள், குறுங்கோள்கள் பூமியை தாக்கியுள்ளன. இப்போது, 99942 அப்போஃபிஸ் (APOPHIS) எனும் குறுங்கோள் 2029 அல்லது 2036இல் பூமியை தாக்க வாய்ப்பிருப்பதாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2004ஆம் ஆண்டு அரிசோனா மாகாணத்தில் இருந்து தொலைநோக்கி மூலமாக இந்த குறுங்கோள் முதல்முறையாக கண்டறியப்பட்டது.
அப்போதே இந்த குறுங்கோளால் பூமிக்கு ஆபத்து இருப்பது விஞ்ஞானிகளால் உறுதி செய்யப்பட்டதை டோரினோ பட்டியலுக்கு அப்போஃபிஸ் குறுங்கோள் மாற்றப்பட்டது. டோரினோ பட்டியல் என்பது பூமிக்கு மிக அருகே அல்லது பூமியை தாக்க வரும் குறுங்கோள், விண்கற்களை மதிப்பீடு செய்வதற்கான பட்டியல் ஆகும். அப்போது முதல் அப்போஃபிஸ் குறுங்கோளின் பாதையை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தீர்க்கமாக கண்காணித்து வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு பூமியில் இருந்து 1.7 கோடி கிலோ மீட்டர் என்கிற நெருக்கத்தை அப்போஃபிஸ் குறுங்கோள் அடைந்தபோது பூமியில் இருந்து அதன் பாதை மற்றும் வீரியம் கண்காணிக்கப்பட்டது. பென்னு என்ற சிறுகோளின் மாதிரியைச் சேகரிக்கும் பணிக்காக OSIRIS-REx எனும் விண்கலம் அனுப்பப்பட்ட நிலையில், அந்தப் பணி முடிவடைந்ததால் தற்போது அப்போபிஸை ஆய்வு செய்ய இந்த விண்கலம் திருப்பி விடப்பட்டுள்ளது.
2029ஆம் ஆண்டு குறுங்கோள் பூமியை நெருங்கி வரும் போது OSIRIS விண்கலம் 4000 கிலோமீட்டர் அருகே சென்று பல்வேறு விதமான பகுப்பாய்வை மேற்கொண்டு 18 மாதங்கள் குறுங்கோளை பின் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 99942 அப்போஃபிஸ் குறுக்கோள் பூமியை தாக்க 2.3 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக நாசா கணித்துளது.