ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக ஜொலித்து அசத்தியுள்ளார். யார் இந்த வருண் சக்கரவர்த்தி? என பார்ப்போம்.

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார். துபாயில் 4 ஆண்டுகளுக்கு முன் அவமானப்பட்ட அதே இடத்தில் ஆட்டநாயகனாக ஜொலித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி கிளேமேக்ஸை நெருங்கி விட்டது.
நேற்று துபாயில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது. பின்பு ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தி ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

தமிழ்நாட்டை சேர்ந்த 33 வயதான வருண் சக்கரவர்த்தி தனது மேஜிக் சுழற்பந்து வீச்சின் மூலம் நியூசிலாந்து அணியை மொத்தமாக முடக்கினார். சமீபகாலமாக இந்திய அணியின் மேட்ச் வின்னராக வருண் சக்கரவர்த்தி மாறி வருகிறார். இங்கிலாந்து டி20 தொடரில் 15 விக்கெட் வீழ்த்தி தொடர் நாயகனாக ஜொலித்த அவர் இப்போது சாம்பியன்ஸ் டிராபியில் கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் அவமானப்பட்ட இதே மைதானத்தில் இப்போது மேட்ச் வின்னராக ஜொலித்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. கடந்த 2021ல் டி20 உலகக்கோப்பை துபாயில் நடந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களில் 33 ரன் கொடுத்த வருண் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.
இந்த தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், வருண் சக்கரவர்த்தி சரியாக பந்துவீசாததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது அதே இடத்தில் ஆட்டநாயகன் விருதை வென்று தான் யாரென்று நிரூபித்துள்ளார் வருண் சக்கரவர்த்தி.
IND vs NZ: புதிய வரலாறு படைத்த விராட் கோலி! உலக கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!

வருண் சக்கரவர்த்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிந்தார். ஆனால் கிரிக்கெட் மீது பெரும் காதலை கொண்டிருந்த அவர் அந்த பணியை ராஜினாமா செய்து கிரிக்கெட்டுக்கு திரும்பினார். பள்ளி நாட்களில் வேகப்பந்து வீச்சாளராகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்த அவர் அதன்பின்பு ஐந்து ஆண்டுகள் கட்டிடக்கலை பயின்ற பிறகு, இரண்டு ஆண்டுகள் தொழில்முறை கட்டிடக் கலைஞராக இருந்தார்.
2016ல் ஒரு டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரரிலிருந்து ஒரு தொழில்முறை வீரராக அவர் மாறத் தொடங்கினார். 2019 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு வலை பந்து வீச்சாளராக இருந்த அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரூ.8.4 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் காயம் அடைந்ததால் பஞ்சாப் கிங்ஸுக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.
அடுத்த ஆண்டு 2020ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை வாங்கியது. அந்த சீசனில் அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதைத் தொடர்ந்து அதாவது 2021ல் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது மர்மமான சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் எதிரணி பேட்ஸ்மேன்கள் முடங்கினார்கள்.

2021ம் ஆண்டு துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் 3 போட்டிகளிலும் அவரால் சரியாக செயல்பட முடியாததால் அணியில் இருந்து நீக்கப்படார். அதன்பிறகு ஐபிஎல் போட்டி மற்றும் முதல்தர போட்டிகளில் அசத்தியதால் 2024ல் இந்திய டி20 அணியில் இடம்பிடித்து தவிர்க்க முடியாத வீரராக மாறினார்.
இங்கிலாந்து டி20 தொடரில் தொடர் நாயகன் விருது வென்றதால் ஓடிஐ அணியில் சேர்க்கப்பாடார். இப்போது ஓடிஐ அணியிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கி விட்டார் இந்த மிஸ்டரி ஸ்பின்னர்.
வருண் சுழலில் சுருண்ட நியூசிலாந்து! 44 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி!