4.0 ஆரம்பம்.. இந்தியர்களுக்கு அடுத்த ஸ்கெட்ச் போடும் டிரம்ப்.. ரெடியாகும் விமானங்கள்.. போச்சு!

2 days ago
ARTICLE AD BOX

4.0 ஆரம்பம்.. இந்தியர்களுக்கு அடுத்த ஸ்கெட்ச் போடும் டிரம்ப்.. ரெடியாகும் விமானங்கள்.. போச்சு!

New York
oi-Shyamsundar I
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் இருந்து 4ம் கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர். இதுவரை 3 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில்.. 4ம் கட்டமாக அடுத்த வாரம் இந்தியர்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.

அங்கே இந்தியர்கள் பலர் அதிகார பூர்வமற்ற முறையில் குடியேறி உள்ள நிலையில் அவர்கள் வெளியேற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 15 நாட்களில் 322 இந்தியர்கள் நாடு அமெரிக்க அரசால் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைந்து, அங்கிருந்து வெளியேற்றப்பட்ட 112 இந்தியர்களுடன் மூன்றாவது விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கடந்த வாரம் தரையிறங்கியது.

USA Donald Trump Visa

இவர்களில் 44 பேர் ஹரியானா, 33 பேர் குஜராத் மற்றும் 31 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். விமான நிலையத்தில் இருந்து தங்கள் மாநிலத்தவர்களை வால்வோ பேருந்தில் ஹரியானா பாஜக அரசு, அழைத்துச் சென்றுள்ளது. இதுவரை நாடு கடத்தப்பட்டவர்களில் குஜராத்திகள், ஹரியானாவை சேர்ந்தவர்கள்தான் அதிகம்.

குஜராத்திகள் நாடு கடத்தல்

முதல் கட்டமாக நாடு கடத்தப்பட்டவர்களில்,

ஹரியானா - 35
குஜராத் - 33
பஞ்சாப் - 31
உத்தரப்பிரதேசம் - 3
மகாராஷ்டிரா - 2

குஜராத்திகள் பலர் கடந்த சில மாதங்களாக 1 கோடி ரூபாய் எல்லாம் தந்து அமெரிக்காவிற்கு ஆவணங்கள் இன்றி செல்லும் நிலையில்தான் இப்படி நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இனியும் பல விமானங்கள் இந்தியாவிற்கு இப்படி வரலாம்.

வட இந்தியர்கள்தான் அதிகம்

இரண்டாம் கட்டமாக நாடு கடத்தப்பட்ட 199 பேரில் 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், 8 பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், கோவா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி நாடு கடத்தப்பட்டவர்களில் தென்னிந்தியர்கள் யாரும் கிடையாது. வடஇந்தியர்கள் மட்டுமே இதுவரை நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.

செலவு எவ்வளவு:

இந்த ராணுவ விமானத்தில் ஒருவரை நாடு கடத்த குறைந்தபட்சம் $4,675 (ரூ. 4.07 லட்சம்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு வணிக விமானத்தில் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலையை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.

ICE வகை விமானங்களை நாடு கடத்த பயன்படுத்தினால் மிகவும் மலிவு விலையில் அதாவது ஒரு நபருக்கு ரூ. 55,000 என்ற செலவில் நாடு கடத்த முடியும்.

ஆனால் சாதாரண விமானத்தில் நாடு கடத்தி அது விபத்துக்கு உள்ளானால்.. அது இரண்டு நாட்டு பிரச்சனையாக மாறும். வேறு நாட்டு குடிமகனை கொன்றதாக மாறிவிடும். இதை தடுக்கவே C-17 போர் விமானத்தை டிரம்ப் பயன்படுத்துகிறார்.

நாடு கடத்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் C-17 போக்குவரத்து விமானம், ஒரு மணி நேரத்துக்கு $28,500 (ரூ. 24,90,559) இயக்கச் செலவாகும், இந்தியாவுக்குச் செல்லும் விமானம் 12 மணி நேரத்திற்கும் அதிகமாகும். கிட்டத்தட்ட 48 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதாவது 119546832 ரூபாய் செலவு. அதாவது 200 பேர் நாடு கடத்தப்பட்டால் கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 6 லட்சம் வரை செலவு ஆகும். அமெரிக்க அரசின் துல்லியமான கணக்குப்படி ஒரு நபருக்கு நான்கரை லட்சம் செல்வாக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

டிரம்ப் நிர்வாகம் ஆவணமற்ற அல்லது சட்டவிரோதமாக குடியேறியவர்களை மட்டுமே குறிவைக்கிறது. முதல் கட்டமாக முந்தைய ஜோ பிடன் நிர்வாகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். அடுத்தது புதிய கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இதற்காக போர் விமானம், பயணிகள் விமானம் இரண்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
English summary
Next batch ready, 4th set of Indians will be deported by Donald Trump from USA
Read Entire Article