"3ம் உலக போர் வெகு தொலைவில் இல்லை.." ஒரே வரியில் டிரம்ப் கொடுத்த வார்னிங்.. பதறும் உலக நாடுகள்

3 days ago
ARTICLE AD BOX

"3ம் உலக போர் வெகு தொலைவில் இல்லை.." ஒரே வரியில் டிரம்ப் கொடுத்த வார்னிங்.. பதறும் உலக நாடுகள்

Washington
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மூன்று ஆண்டுகளாகத் தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் முயற்சி எடுத்து வருகிறார். இருப்பினும், இதில் உக்ரைன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகப் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என விமர்சித்துள்ள டிரம்ப், 3ம் உலகப் போரும் கூட வெகு தொலைவில் இல்லை என்று சாடியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் போர் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்து இதுவரை பல்வேறு தரப்பும் தீவிர முயற்சிகள் எடுத்த போதிலும் அது பெரியளவில் பலன் கிடைக்கவில்லை.

Donald Trump Russia World war

நேரடியாக தலையிட்ட டிரம்ப்

இதற்கிடையே இப்போது டிரம்ப் தரப்பு இதில் நேரடியாக தலையிட்டுள்ளது. சவுதியில் சமீபத்தில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் உக்ரைன் போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். அது பாசிட்டிவான முறையிலேயே செல்வதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே 3ம் உலகப் போர் அவ்வளவு தூரத்தில் இல்லை என்று டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் மியாமியில் ஃபியூச்சர் இன்வெஸ்ட்மென்ட் இன்ஸ்டிடியூட் உச்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், "உலகில் அனைவரும் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. இதன் காரணமாகவே உலகெங்கும் உள்ள போர்களை முடிவுக்குக் கொண்டு வர அவசர அவசரமாக நடவடிக்கை எடுத்து வருகிறேன். மோதல்களைத் தீர்ப்பதும், பூமியை மீண்டும் அமைதியின் பாதைக்கு மீட்டெடுப்பதும் அவசியமாகும்" என்றார்.

ரஷ்யாவுக்கு போகும் பவர்! காரணம் டிரம்பின் சீக்ரெட் டீல்? உக்ரைன் நிலைமை பரிதாபமாகிவிடும்! வார்னிங்
ரஷ்யாவுக்கு போகும் பவர்! காரணம் டிரம்பின் சீக்ரெட் டீல்? உக்ரைன் நிலைமை பரிதாபமாகிவிடும்! வார்னிங்

சர்வாதிகாரி

உக்ரைன் போர் தொடர்பாகக் கடந்த புதன்கிழமை அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே சவுதி அரேபியாவில் தான் பேச்சுவார்த்தை நடந்தது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளித்த சவுதிக்கு நன்றி தெரிவித்த அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தை என்பதே நல்ல முன்னேற்றம் தான் எனக் குறிப்பிட்டார். அதேநேரம் அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சற்று விமர்சித்தே பேசினார். ஜெலன்ஸ்கியை ஒரு வெற்றிகரமான காமெடி நடிகர் என்றும் தேர்தல் இல்லாத சர்வாதிகாரி என்றும் அவர் சாடினார்.

மத்திய கிழக்கு போர் மற்றும் ரஷ்யா உக்ரைன் மோதல் குறித்துப் பேசிய டிரம்ப், "மத்திய கிழக்கில் என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். இப்போது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து கொண்டிருப்பதையும் பாருங்கள். அவை அனைத்தையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டு வரப் போகிறோம்.

டிரம்ப் & எலான் மஸ்கிற்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. அமெரிக்கா முழுக்க திரண்ட மக்கள்.. பரபரப்பு!
டிரம்ப் & எலான் மஸ்கிற்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. அமெரிக்கா முழுக்க திரண்ட மக்கள்.. பரபரப்பு!

மூன்றாம் உலகப் போர்

நீங்கள் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். மூன்றாம் உலகப் போரால் இங்கு யாருக்கும் எந்தவொரு லாபமும் இல்லை. அதேநேரம் நாம் மூன்றாம் உலகப் போரில் இருந்து வெகு தொலைவிலும் இல்லை. நான் மீண்டும் சொல்கிறேன். மூன்றாம் உலக போரில் இருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. இன்னும் ஒரு வருடம் நீங்கள் முந்தைய (அதிபர் ஜோ பைடன்) அரசைத் தொடர அனுமதித்து இருந்தால் மூன்றாம் உலகப் போரை நிச்சயம் கண்டு இருப்பீர்கள். ஆனால், இப்போது அது நிச்சயம் நடக்காது" என்றார்.

ரஷ்யாவின் கண்டிஷன்

உக்ரைனைப் பொறுத்தவரை ரஷ்யாவும் கூட மோதலை முடிவுக்குக் கொண்டு வரவே விரும்புவதாகத் தெரிகிறது. இருப்பினும், அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் நிச்சயம் சேரக்கூடாது.. அதற்கு உறுதி அளிக்க வேண்டும் என்பதில் புதின் தெளிவாக இருக்கிறார். ஒருவேளை உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் நேட்டோ படைகள் ரஷ்யா எல்லைக்கு மிக அருகே வந்துவிடும் என்பதே இதற்குக் காரணம். நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடும் என்று தகவல் வந்த பிறகே ரஷ்யா முழு வீச்சில் தனது தாக்குதலைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
Donald Trump warns that World War 3 is not far away, amid Ukraine Russia war (உக்ரைன் போரால் டிரம்ப்பிற்கு ஏற்பட்ட மிக பெரிய ஆபத்து): Trump terms Ukraine's President Zelenskyy as a dictator without elections
Read Entire Article