32 வயது கர்ப்பிணி பெண் பலாத்காரம்.. 3 வயது மகன் கண்முன் கொடுமை.. காவலரின் அதிர்ச்சி செயல்.!

4 hours ago
ARTICLE AD BOX

 

3 வயது மகன் கண்முன் 32 வயது கர்ப்பிணி பெண்மணி பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாவட்டம், சன்கணீர் காவல் நிலையத்தில், காவலராக வேலை பார்த்து வருபவர் பாகா ராமா (வயது 48). சம்பவத்தன்று, காவல் நிலையத்திற்கு தனது 3 வயது மகனுடன் வந்த 32 வயது பெண், புகார் அளிக்க முற்பட்டார். 

இதையும் படிங்க: பெற்றோரின் கண்டிப்பால் வீட்டில் இருந்து வெளியேறிய 12 வயது சிறுமி ஐவர் கும்பலால் பலாத்காரம்..!

மகன் கண்முன் பலாத்காரம்

அப்போது, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததாக கூறிய காவலர், பெண்ணை வெள்ளிக்கிழமை அன்று இரவு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடுமை அவரது 3 வயது மகன் கண்முன் நடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் மீது புகார் அளிக்கச் சென்றபோது, காவலர் பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.

அதிகாரிகள் விசாரணை

மேலும், பெண்ணின் மகனை பிணையக்கைதி போல பிடித்து வைத்தது கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த கொடுமை தொடர்பாக பெண்மணி இரண்டு நாட்கள் கழித்து புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற உயர் அதிகாரிகள் காவலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். துறை ரிதியான விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதையும் படிங்க: பெண்ணை காதலிப்பதாக நடித்து பலாத்காரம்; யூடியூபர் அதிரடி கைது.!

Read Entire Article