3000 VFX காட்சி.. 20கோடி பட்ஜெட்.. கிங்ஸ்டன் இயக்குனர் கமல் பிரகாஷ் என்னம்மா வேலை செஞ்சிருக்காரு!

3 hours ago
ARTICLE AD BOX

3000 VFX காட்சி.. 20கோடி பட்ஜெட்.. கிங்ஸ்டன் இயக்குனர் கமல் பிரகாஷ் என்னம்மா வேலை செஞ்சிருக்காரு!

Interview
oi-Mari S
By
| Published: Thursday, March 6, 2025, 21:10 [IST]

சென்னை: இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான 'கிங்ஸ்டன்' எனும் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் நாளை வெளியாகிறது. இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் கமல் பிரகாஷ் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

Kingston gv prakash kumar interview

20 கோடி பட்ஜெட்டில் ஜி.வி. பிரகாஷை வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள இந்த படத்தில் ஹாரர் காட்சிகளுக்காக ஏகப்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

3000 VFX காட்சிகள்: ஜி.பி. பிரகாஷ் குமார் நடித்துள்ள கிங்ஸ்டன் படத்தில் சுமார் 3000 விஎஃப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல் செட் படம் இது. சிஜி சிக்கல்களை தவிர்ப்பதற்காக பேய் கதாப்பாத்திரத்தில் வருபர்களுக்கு தத்ரூபமாக மேக்கப் போடப்பட்டுள்ளது. அந்த மேக்கப்பை அகற்ற அதிகபட்சமாக 8 மணி நேரம் செலவிட்டனர்.

வேறலெவலில் வேலை பார்த்த இயக்குநர்: பிரமாண்டமான செட்டில் 21 நாட்கள் படப்பிடிப்பு நடைப்பெற்றது. பெரிய அமைப்பில் மழை, பனி போன்ற செட்டப் அமைக்கப்பட்டது. படத்தின் இரண்டாம் பாதியை வெறும் 21 நாட்களிலேயே முடித்துவிட்டோம். நாங்கள் நீருக்கடியில் படப்பிடிப்பு செய்தோம். இதற்காக கேமராவிற்காக பம்பாய் குழுவிலிருந்து நிபுணர்களை அழைத்து வந்தோம். இதுவரைக்கும் கடலுக்குள் யாரும் படம் எடுத்ததில்லை. கடலுக்கு அடியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் பிரம்மாண்டமாக இருக்கும். இந்திய சினிமாவில் இது ஒரு புது அனுபவமாக இருக்கும். ஒரு மீனவ கிராமத்தால் மீன் பிடிக்க உள்ளே போக முடியாது. அதன் வலிகளை கொண்டு உருவாக்கப்பட்ட கதையாக இந்தப் படம் உள்ளது என்றார்.

தியேட்டரில் பார்க்கலாம்: ஜி.வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி இணைந்து நடித்துள்ள இந்த படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை நிச்சயம் இந்த படம் வெகுவாக கவரும். மார்ச் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த படத்தை குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து பார்க்கலாம் எனக்கூறியுள்ளார்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kingston Movie DIrector reveals movie budget and heavy vfx work in this movie: ஜிவி பிரகாஷ் குமார், திவ்யபாரதி நடிப்பில் உருவாகியுள்ள கிங்ஸ்டன் படத்தின் சிறப்புகளை அதன் இயக்குநர் கமல் பிரகாஷ் விளக்கியுள்ளார்.
Read Entire Article