30 நாட்களுக்கு ரஷ்யா – உக்ரைன் போர் கிடையாது! ஆனால்?! – டிரம்ப் முக்கிய அறிவிப்பு!

3 hours ago
ARTICLE AD BOX
Putin - Trump - Zelensky

வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது. இப்படியான சூழலில் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ரஷ்யா – அமெரிக்கா உறவு என்பது தற்போது நெருக்கமாகி உள்ளது.

இதனால், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா தற்போது பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, ரஷ்யா – உக்ரைன் போர் மத்தியஸ்தலத்தில் சவூதி அரேபியாவும் ஈடுபட்டது. இந்த சமாதான பேச்சுவார்த்தையில் 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டது. ஆனால் அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.

தொலைபேசி உரையாடல் :

இப்படியான சூழலில் தான், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் போர் நிறுத்தம் குறித்து உரையாடியுள்ளார். அதன் பிறகு தனது ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில்,  ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று எனது தொலைபேசி உரையாடல் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இந்த பயங்கரமான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், ஒரு முழுமையான போர்நிறுத்தத்தை விரைவில் அமல்படுத்துவதற்கும் விரைந்து செயல்படுவோம்

தற்போது உக்ரைனில் உள்ள அனைத்து எரிசக்தி ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை நிறுத்துவதற்கான போர்நிறுத்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போர் தொடங்கியிருக்காது. அமைதிக்கான ஒப்பந்தத்தின் பல கூறுகள் இந்த தொலைபேசி உரையாடலில் விவாதிக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் அதை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். அந்த செயல்முறை இப்போது முழுவீச்சில் உள்ளது. என பதிவிட்டுள்ளார்.

ரஷ்யா தாக்குதல் நடத்தாது

இதன் மூலம் அடுத்த 30 நாட்களுக்கு உக்ரைன் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 30 நாள் இடைக்கால போர்நிறுத்தத்தை ரஷ்யாவும் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த இடைக்கால போர்நிறுத்ததில் ரஷ்யா வசம் உள்ள 175 போர் பணய கைதிகளையும் விடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், 23 உக்ரைன் ராணுவ வீரர்களும் இதில் விடுவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடரும் தாக்குதல் :

இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், அது எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மட்டுமே தடுத்து நிறுத்தும் என்பதால், ரஷ்ய ராணுவம் வழக்கம் போல தங்கள் மற்ற தாக்குதல்களை தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் உள்ள மருத்துவமனை கட்டடம் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன என உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நிலைப்பாடு :

இந்த இடைக்கால போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எதுவும் இன்னும் தெரிவிக்கவில்லை. போர் நிறுத்தம் கட்டுப்பாடுகள் குறித்து இன்னும் முழுதான விவரங்கள் வெளியாகவில்லை என்றும் நாம் அமெரிக்க அதிபர் டிரம்புடன் உரையாடுவது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ரஷ்யர்கள் அமெரிக்கர்களுக்கு என்ன உத்தரவாதங்கள் வழங்கினார்கள் அல்லது அமெரிக்கர்கள் ரஷ்யர்களுக்கு என்ன உத்தரவாதங்கள் வழங்கினார்கள் என்பதை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Read Entire Article